பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 செளந்தர கோகிலம் காரியத்தைச் செய்ய இணங்கினாலும், இவனிடம் நற்குணம் இல்லாமல் போகவில்லை. இவன் கடைசியில் என்னிடம் வெளியிட்ட விஷயங்களில் பொய்க்கலப்பு இராதென்பது நிச்சயம். யாரோ ஒரு மனிதன் திருவிடமருதூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து, அவ்விடத்தில் சுமார் ஒரு மாசகாலம் இருந்ததும், காந்திமதியம்மாள் கொடுக்கச் சொன்னதாக ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததும் உண்மையேயன்றி சிறிதும் பொய்யல்ல. ஆனால், அவள் உண்மையில் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாளா, அல்லது, வேறே எவராகிலும் இவ்வாறு பொய்யான தகவலைச் சொல்லி முத்துசாமியைச் சுலபத்தில் ஏமாற்றும்படி திட்டம்செய்து அனுப்பி இருப்பார்களா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. காந்திமதியம்மாள் இதில் சம்பந்தப் படாவிட்டாலும் கூட, வேறே யாரோ ஒருவர் என்னைக் கொல்ல வேண்டுமென்று தீர்மானிப்பது நிச்சயமாகத் தெரிகிறது. எனக்குத் தெரிந்தவரையில் நான் யாருக்கும் அற்பக் கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆதலால் எனக்கு இந்த உலகில் எவரும் பகைவரே இல்லையென்பது நிச்சயம். அப்படியானால் என்னைக் கொல்லவேண்டுமென்ற விபரீதமான சங்கற்பத்தோடு இருப்பது யார்? அவரது உள் கருத்து எதுவாக இருக்கலாம்? எனக்குத் தெரியாமல் யாராவது பங்களாவில் இருப்பார்களா? அவர்கள் என்னைக் கொன்று விட்டால் என்னுடைய சொத்துக் களையெல்லாம் அடையலாமென்று எண்ணுகிறார்களா? நான் இறந்துபோனால், என் தகப்பனார், மகன், என் மனையாட்டி ஆகிய மூவரும் இருக்கையில் என் சொத்து பங்காளியை எப்படிச் சேரும்? என்னைக் கொல்ல யத்தனித்தது போல, அந்தப் பங்காளிகள் மற்ற மூவரையும் கொல்ல இனி ஏதாவது ஏற்பாடு செய்வார்களோ? அல்லது, நான் இந்த சமஸ்தானத்து திவான் உத்தியோகம் பார்ப்பது எவருக்காகிலும் இடைஞ்சலாக இருக்குமோ? அதனால் என்னைக் கொன்றுவிட எத்தனிக் கிறார்களோ? ஒருவேளை அதுதான் நிஜமாய் இருக்கலாம். அல்லது விஷயம் இன்னொரு மாதிரியாகவும் இருக்கலாம். என் மனையாட்டியான காந்திமதியம்மாளின் நற்குணங்களையும் அழகையும் கண்டு எவனாவது அவளிடம் துர்மோகம் கொண்டு, அவளை அடைய எண்ணி, அதற்குப் பூர்வ பீடிகையாக