பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுக்கெனை 243 என்னைக் கொல்ல நினைத்திருப்பானோ? உண்மை எது என்பதை இப்போது எப்படி நிச்சயிக்கிறது? ஆயினும், ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயமாகப்படுகிறது. முத்துசாமி வெளியிட்ட வரலாற்றின் பிரகாரம் என் காந்திமதிக்கு ஆதி முதல் ஒர் ஆசை நாயகன் இருந்து, அவன் என்னைக் கொல்ல யத்தனித்திருப்பதாக வைத்துக் கொண்டு பார்க்கும் பட்சத்தில், இதுவரையில் அவனுடைய துராசையைப் பூர்த்தி செய்துவைத்த கடவுள், கடைசியில் இந்தப் பாஷாண விஷயத்தில் மாத்திரம் அவனுடைய கருத்து நிறைவேறாமல் போகும்படிச் செய்த காரணமென்ன? அவன் எனக்குப் பாஷாணமிட்டு என்னைக் கொல்வது அக்கிரமச் செய்கையென்று கண்டு கடவுள் இதைத் தடுத்திருக்கும் பக்ஷத்தில், கடவுள் சாசுதியாய் எனக்கு மனையாட்டியாக வரப்போகும் இவளை அவன் திருட்டுத் தனமாய் அபகரிக்கவும், அவர்கள் இருவருக்கும் கள்ள நட்பு ஏற்படவும் கடவுள் எப்படி அநுமதி கொடுத்திருப்பார்: அவர் தவறாத நீதிவானாக இருந்தால் அதையும் நடவாமல் தடுத்திருக்க வேண்டுமல்லவா? ஆகவே, நான் என் அரிய மனையாட்டியின் மேல் உடனே சம்சயம் கொள்வது நியாயமல்ல; ஆயினும் இது மகா விபரீதமான சம்பவம். ஆதலால் இதை நான் அலட்சியமாக மதித்து இவ்வளவோடு விட்டு விடுவதும் யுக்தமாகத் தோன்ற வில்லை. நான் ஏதாவது தந்திரம் செய்து, என்னைக் கொல்ல உத்தேசித்த மனிதர் யார் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். கண்டபின், அவர்களுடைய கோரிக்கை நியாயமானதாக இருந்தால் அதை நானே பூர்த்தி செய்விக்க வேண்டும்” என்று திவான் பலவாறு எண்ணமிட்டு ஆக்ஷேபனை சமாதானங்கள் செய்துகொண்டே இருந்து, அன்றைய இரவைக் கழித்தார். ஆயுர்வேத வைத்தியரும் மற்ற ஜனங்களும் ஒன்று கூடி அரும்பாடு பட்டு முத்துசாமியின் உயிர் போகாமல் காப்பாற்றி வாந்தியும் பேதியும் நிற்கும்படிச் செய்தார்கள். வைத்தியர் சிறந்த நிபுணர். ஆதலால், அவரது ஒளவுதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இராமபாணம்போலச் சென்று, இரத்தத்தில் கலந்து கொண்டிருந்த பாஷாணத்தை முறித்து விலக்கிப் பிரித்து வெளிப்படுத்தி, பொழுது விடிவதற்குள் இரத்தத்தைச் சுத்தி செய்து விட்டன. அவனது தேகத்தில் உயிரின் ஒரு திவலை