பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுக்கெனை 245 அவன் தேறத் தேறத் தாங்களும் தெளிவடைந்து, அவன் தப்பிப் பிழைத்தான் என்பதை உணர்ந்தவுடன் மிகுந்த களிப்பும் குதுகலமும் கொண்டு ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் பேசத் தலைப்பட்டனர். ஆனாலும், திவான் ஒருவரே அதற்கு மாறான மனநிலைமையைக் கொள்ளத் தொடங்கினார். முத்துசாமி பிழைக்க வேண்டுமே என்ற கவலையும் அச்சமும் இருந்த வரையில் திவானினது கவனம் முழுதும் தமது சொந்த விஷயங்களை விடுத்து அவன் மீதே சென்று கொண்டிருந்தது. அவனது அபாயம் நீங்கிவிட்டது. அவன் பிழைத்துக்கொண்டான் என்ற நிச்சயம் ஏற்படவே, அவரது முகத்தில் மேகப்படலங்கள் சூழ்ந்து அதிகரித்து அடரத்தொடங்கின. தமது மனையாட்டியைப் பற்றிய நினைவு சதாகாலமும் தோன்றித் தோன்றி அவரது மனத்தைப் புண்படுத்தி எண்ணிறந்த சிந்தனைகளையும் சந்தேகங்களையும் கொடுத்துத் தத்தளிக்க ஆரம்பித்தது. தம்மீது அவ்வளவு அதிகமான பகைமை பாராட்டித் தம்மை கொல்ல எண்ணத் தக்க பெரிய விரோதி யாரும் தமக்கு இந்த உலகில் இல்லை என்ற எண்ணம் உண்டாக உண்டாக, ஒருகால் முத்துசாமி கூறியதே உண்மையாக இருக்குமோ என்ற சம்சயம் பலமாக எழுந்து வதைக்கத் தொடங்கியது. ஜனங்கள் நெருப்பில்லாமல் புகை உண்டாகாதென்று சொல்லுவார்களல்லவா? ஆகையால், ஏதேனும் சொற்பமாவது உண்மையில்லாமல் காந்திமதி யம்மாளின் மீது இப்படிப்பட்ட அபவாதம் உண்டாயிருக்காது. சொல்லாமல் பிறவாது, அள்ளாமல் குறையாது என்ற சொல் பொய்யானதல்ல. அவள் முத்துசாமி சொன்னபடி முழுதும் சம்பந்தப்பட்டிருக்கிறாளா, அல்லது சிறிதளவு சம்பந்தப்பட்டு இருக்கிறாளா, அல்லது அவள் பேரில் சொல்லப்பட்டது சுத்த அபாண்டமான கற்பனையா என்பதை நான் நிச்சயிக்க வேண்டும்; இது முதல் வேலை, இரண்டாவது வேலை, இவள் இதில் சம்பந்தப்படவில்லையானால், வேறே யார் இந்தக் காரியத்தைச் செய்யத் தூண்டியது, அப்படிச் செய்யத் தூண்டியவர்கள் நான் இறந்தபிறகு அதனால் எவ்விதமான நன்மையை அடைய எண்ணுகிறார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டும். மூன்றாவது அவர்களது கோரிக்கை நியாயமானதாக