பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 செளந்தர கோகிலம் இருந்தால், அதை நானே நிறைவேற்றி வைக்கவேண்டும். இதற்குத் தகுந்த தந்திரம் எதையாவது நான் செய்யவேண்டும்: என்று திவான் முதலியார் ஒருவிதமான முடிவிற்கு வந்தார். முத்துசாமி பாஷாணம் உண்ட தினத்திலிருந்து மூன்றாவது நாளைய இரவில் அவர் தமது போஜனத்தை முடித்ததாகக் காட்டிவிட்டுத் தமது சயனத்தையடைந்து அதன்மீது சாய்ந்த வண்ணம் காந்திமதியம்மாளையும் ராஜாபகதூரையும் நினைத்து மனநைந்துருகிக் கண்ணிர் விடுத்துப் பாகாய் நெகிழ்ந்தோடிக் கொண்டிருந்த தருணத்தில் அவரது இன்னொரு சமையற் காரனான கந்தன் பதுங்கி ஒதுங்கித் தத்திக் குதித்துக்கொண்டு அவருக்கெதிரில் பணிவாக வந்து நின்று தனது கைகள் இரண்டையும் குவித்து அவரை நமஸ்கரித்தபடி வணக்கமாக நின்றான். எதிர்பாரர் வகையில் அவனைக் கண்ட திவான் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து தமது கண்ணிரைத் துடைத்துக்கொண்டு, அவன் தம்மிடம் முக்கியமான செய்தி எதையோ சொல்ல வந்திருக்கிறானென்று நினைத்து, “ஏனப்பா கந்தசாமீ! எங்கே வந்தாய்? மறுபடியும் முத்துசாமி வேலைக்காரப் பெண்ணுக்கு எதையாவது கொடுத்தானா? அல்லது வேறே ஏதாவது விசேஷம் உண்டா' என்று அன்பாகவும் பிரியமாகவும் அவனிடம் வினவினார். அவரது சொற்களைக்கேட்ட கந்தன் அவமானத்தினாலும் அச்சத்தினாலும் குன்றிப்போய் ஒருவித நடுக்கம் அடைந்தான். ஆனாலும் தன்னை ஒருவாறு அமைதிப்படுத்திக்கொண்டு நிரம்பவும் வணக்கமாகவும் மரியாதையாகவும் திவானை நோக்கி, "எஜமானே! தாங்கள் அன்றைய தினம் கோபித்துக் கொண்டு எனக்குப் புத்தி சொல்லியதைக் கேட்டு நான் மறுபடி முத்துசாமியின்மேல் புகார் சொல்வேனா? ஒருநாளும் மாட்டேன். அதுவுமன்றி, அவன் இப்பொழுதுதானே செத்துப் பிழைத்தான். அவன் உண்மையிலேயே இப்போது ஏதாவது தவறு செய்திருந்தாலும், இந்தச் சமயத்தில் தானா நான் அவன் மேல் புகார் சொல்வேன்? நான் வேறே யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் புகார் சொல்ல வரவில்லை. என் சொந்த விஷயமாக நான் எஜமானிடம் ஒரு மனுச்செய்துகொள்ள