பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 247 வந்தேன். எஜமானுடைய உத்தரவு ஆனால் சொல்லுகிறேன். எஜமானுக்கு இப்போது அசந்தர்ப்ப சமயமாயிருந்தால், நான் நாளையதினம் வந்து விக்ஞாபனம் செய்து கொள்ளுகிறேன்" என்று நிரம்பவும் விநயமாகக் கூறினான். அதைக் கேட்ட திவான் அவனை நோக்கிப் புன்னகை செய்து நிரம்பவும் பட்சமாகப் பேச ஆரம்பித்து, 'ஒகோ அப்படியா: உன் சொந்த விஷயமாகவா என்னோடு பேச வந்தாய்! சரி; அப்படியானால் சொல்லப்பா என்ன விசேஷம்?" என்றார். உடனே கந்தன், "எஜமானே! நான் என்னுடைய சொந்த ஊரைவிட்டுத் தங்களிடம் வேலைக்கு வந்து இரண்டு வருஷத்துக்குமேல் ஆகிறதென்பது தங்களுக்குத் தெரிந்த விஷயம். நான் என் சொந்த ஜனங்களைப் பார்த்து எத்தனையோ வருஷகாலம் ஆய்விட்டதுபோல என் மனசில் ஒருவிதமான ஏக்கம் இருந்து வருகிறது. அதுவுமன்றி எனக்கு இப்போது வயசு முப்பது ஆகிறது. எங்கள் சொந்த மனிதர் வீட்டில், கலியாணம் செய்யத்தக்க பருவமடைந்த பெண் இருப்பதாயும், அதை எனக்குக் கட்டிக்கொடுக்க அவர்களுக்குப் பிரியமென்றும் கடிதம் வந்துகொண்டே இருக்கிறது. எனக்குப் பூர்வீகமான நிலம் கொஞ்சம் இருக்கிறது. அது சுமார் எழுநூறு எண்ணுறு ரூபாய் பெறும். அது என் தகப்பனார் காலம் முதல் ஒருவரிடம் முந்நூறு ரூபாய்க்கு அடமானமாக இருந்து வருகிறது. நான் ஊருக்குப் போய் அந்த நிலத்தை விற்று கடனைக் கொடுத்துவிட்டு மிகுதி இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு என்னுடைய கலியாணத்தை ஒருவிதமாக முடித்துக்கொள்ளலாமென்று நினைக்கிறேன். அதுவுமன்றி, நான் இந்த இரண்டு வருஷகாலம் தங்களிடம் சேவித்ததில் ஒரு நானுறு ரூபாய் சேர்ந்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு நான் அவ்விடத்திலேயே ஒரு சின்ன வியாபாரம் எதையாவது செய்து சொந்ந ஊரிலேயே இருந்து என் ஜீவனத்தை நடத்தவேண்டுமென்ற எண்ணம் என் மனசில் இருந்து வருகிறது. இவ்விடத்தில் முத்துசாமிக்குச் செளக்கியமாகி விட்டது. நாளையதினம் அவன் அநேகமாய் வேலைக்கு வரக் கூடிய நிலைமையிலிருக்கிறான்; ஆகையால், நாளையதினம் முதலே எஜமானர் எனக்கு உத்தரவு கொடுத்தனுப்பினால் நலமாக இருக்கும்” என்று நிரம்பவும் வணக்கமாகக் கூறினான்.