பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 243 திவான், "சரி, அப்படியே செய். உனக்கு என்னிடத்திலிருந்து எவ்வளவு சம்பளம் சேரவேண்டும்? சொன்னால், உடனே தருகிறேன்' என்றார். கந்தன், "எஜமானே! நேற்றுதானே முதல் தேதி. போன மாசத்துச் சம்பளத்தை நான் நேற்று தங்கள் குமாஸ்தாவிடம் வழக்கப்படி வாங்கிக்கொண்டுவிட்டேன். எனக்குப் பாக்கி ஒன்றுமில்லை. எஜமானருடைய உத்தரவும் ஆசீர்வாதமுந்தான் எனக்குக் கிடைக்கவேண்டும். வேறொன்றுமில்லை” என்றான். அவனது பெருந்தன்மையைக் கண்ட திவானினது மனம் இளகி ஒருவித மகிழ்ச்சியடைந்தது. அவர் அவனை நோக்கி, "அப்பா, கந்தசாமி! நீ நேற்று இன்று ஆகிய இரண்டு தினங் களுக்கு இங்கே வேலை செய்திருக்கிறாய். இந்த இரண்டு தினங்களுக்கும் நான் உனக்குச் சம்பளம் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். அதுவுமன்றி, நீ ஊருக்குப் போய்ச்சேருகிற வரையில் உனக்குப் பிடிக்கும் பிரயாணச் செலவையும் நான் கொடுக்க வேண்டியவன். அப்படி இருக்க, உனக்குச் சேர வேண்டிய பாக்கி ஒன்றுமில்லையென்று நீ சொல்வது சரியல்ல. அதிருக்கட்டும். நீ சாப்பிட்டாய் விட்டதா?’ என்றார். கந்தன், 'இல்லை எஜமானே! தாங்கள் துரங்குவதற்கு விஷயத்தைத் தங்களிடம் சொல்லி உத்தரவு பெற்றுக்கொண்டு போய்ப் பிறகு என் சாப்பாட்டைக் கவனிக்கலாமென்று நினைத்தேன்’ என்றான். திவான், "சரி, நீ போய் அந்தக் காரியத்தை முடித்துக் கொண்டுவா; அதற்குள் நான், உனக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்து வைக்கிறேன்” என்றார். உடனே கந்தன், 'எஜமானே! தாங்கள் எனக்கு முழு மனதோடு உத்தரவு கொடுத்ததே என் மனம் குளிரும்படிச் செய்து விட்டது. தாங்கள் இதுவரையில் எனக்கு எவ்வளவோ பொருள் கொடுத்திருக்கிறீர்கள். இரண்டு நாளைய சம்பளத்தைப் பொருட் படுத்திக் கணக்கு வைத்து நான் கேட்கவில்லை. தாங்கள் படுத்து நித்திரை செய்யப்போகும் சமயத்தில் அதற்குப் பங்கமாகத் தாங்கள் எழுந்து போய்ப் பணம் எடுத்து எனக்குக் கொடுக்க வேண்டியதில்லை. தயைசெய்து தாங்கள் துரங்கலாம். பணத்தைப்