பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்கள் எலி 25 கற்பகவல்லியம்மாளைப் பார்க்கும் பொருட்டு, முதல்நாள் அவளைப் படுக்க வைத்திருந்த அந்தப்புரத்திற்குள் நுழைந்து பார்க்கக் கட்டில் வெற்றுக் கட்டிலாக இருந்தது. கற்பகவல்லி யம்மாள் அந்த விடுதிக்குள் காணப்படவில்லை. ஒருகால் தனது காலைக் கடன்களை முடித்துக் கொள்ளும்பொருட்டு, அந்த அம்மாள் வெளியில் போயிருக்கலாம் என்று சந்தேகித்தவர் களாய் அவர்கள் இருவரும் அவ்விடத்திலேயே இருந்து அவளது வருகையை எதிர்பார்க்க நினைத்து, ஆசனங்களில் உட்கார்ந்து கொண்டனர். பூஞ்சோலையம்மாள் அந்த இடத்தில் ஒரு மேஜைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியிலேயேதான் எப்போதும் உட்காருவது வழக்கம். அந்த மேஜையில் காகிதம், மை, இறகு முதலிய எழுது கருவிகளும், புஸ்தகங்களும் நிறைந் திருந்தன. அந்த நாற்காலியிலேயே பூஞ்சோலையம்மாள் தனது வழக்கப்படி உட்கார்ந்து தற்செயலாக மேஜை பக்கம் திரும்பிப் பார்க்க, அதன் மேல் ஒரு கடிதம் எழுதி மடித்து வைக்கப்பட் டிருந்தது தென்பட்டது. அது முதல் நாளிரவில் அவ்விடத்தில் இல்லாமல் புதிதாக இருந்தமையால், அது யாருக்கு யாரால் எழுதப்பட்டது என்ற விவரங்களை அறிய ஆவல் கொண்ட வளாய்ப் பூஞ்சோலையம்மாள் தனது கவனத்தைச் செலுத்தி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த மேல் விலாசத்தைப் படிக்கலானாள். - ம-ஹா-மஹா-பூர், பூஞ்சோலையம்மாள் அவர்கள் சமூகத் துக்கு என்ற எழுத்துக்கள் மேல்விலாசத்தில் காணப்பட்டன. அதைக்கண்டு மிகுந்த கலக்கமும், வியப்பும் அடைந்த பூஞ்சோலையம்மாள், "இந்தக் கடிதம் ஏது?" என்று கூறிய வண் ணம் ஆவலாக அதை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: கனம் தங்கிய பூஞ்சோலையம்மாள் அவர்களுக்கு, கற்பக வல்லியம்மாள் வணக்கமாக எழுதிக்கொள்வது:- இன்றைய தினம் காலையில் என் மகனாலும், அதன்பிறகு என்னாலும் தங்க ளுக்கும் தங்களுடைய குழந்தைகளுக்கும் நேர்ந்த துயரமும் அவமானமும் அளவில் அடங்கக்கூடியவை அல்ல. அப்படி இருந்தும், எங்களிடத்தில் கொண்ட கரைகடந்த வாத்சல்யத்தி