பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 செளந்தர கோகிலம் காக அவ்வாறு செய்திருப்பாரோ என்ற பல நினைவுகள் தோன்றின. அவன் உடனே திவானுக்கெதிரில் ஒடிப் பதைபதைத்து நின்று நிரம்பவும் வணக்கமாகவும் அச்சத்தோடும் அவரை நோக்கி, "எஜமானே! இந்தப் பொட்டலம் எனக்காக வைக்கப்பட்ட பொட்டலமல்ல. இதில் நாலாயிரத்து நானூறு ரூபாய் பெறுமானமுடைய நோட்டுகள் இருக்கின்றன. வேறே எந்தச் செலவுக்காவது உத்தேசித்து இதை வைத்தீர்களோ, அல்லது இராத்திரி வேளையாகையால் வெளிச்சக் குறைவினால் தப்பான நோட்டுக்களை வைத்துவிட்டீர்களோ என்னவோ தெரிய வில்லை. நோட்டுகளெல்லாம் அப்படியே இதோ இருக்கின்றன. எண்ணிப் பார்த்து எடுத்துப் பெட்டியில் பத்திரப்படுத்துங்கள். எனக்குப் பணமே வேண்டாம்” என்று பயபக்தி விநயத்தோடு கூறியவண்ணம் நோட்டுகளையெல்லாம் அவருக்கு எதிரிலிருந்த மேஜையின்மீது வைத்துவிட்டான். அதைக்கண்ட திவான் பெருந்தன்மையாக அவனை நோக்கிப் புன்னகை செய்து, 'கந்தசாமீ. நான் தவறாக இந்த நோட்டுகளை உனக்குக் கொடுத்ததாகவா நீ எண்ணிக் கொண்டாய் சே! நான் என் மனப்பூர்வமாய் உனக்குக் கொடுக்க வேண்டுமென்றே நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் நான்கு நூறு ரூபாய் நோட்டுகளையும் வைத்துப் பொட்டலம் கட்டிக் கொடுத்தேன். நோட்டுகளை நேரில் கொடுத்தால் நீ வாங்கிக்கொள்ள ஆட்சேபிப்பாயென்று நினைத்து நான் பொட்டலங்கட்டி மறைத்துக் கொடுத்தேன். நீ என்னிடம் இரண்டு வருஷகாலம் இருந்து எனக்கு உழைத்திருப்பதன்றி என்னை ஒரு தெய்வம்போல மதித்து உண்மையான பயபக்தி விசுவாசத்தோடு நடந்து கொண்டிருக்கிறாய். உன்னுடைய கடனைத் தீர்த்து உனக்குக் கலியாணம் செய்துவைத்து, உன்னை ஒரு வர்த்தகத்தில் அமர்த்தவேண்டிய பொறுப்பு என்னைச் சேர்ந்ததாயிற்று. எனக்குக் கடவுள் ஏராளமான செல்வத்தை அருளியிருக்கிறார். இந்தப் பணம் அற்பமானது; உனக்கோ இது மலை போன்றது. இதைக்கொண்டு உன் குடும்பம் rேமப்பட்டுப்போகும். ஆட்சேபணை சொல்லாமல் இதை நீ எடுத்துக் கொள். நீ இங்கே இருந்து ஊருக்குப் போய் உன் கடனைத் தீர்ப்பது வரையில் உனக்கு நானுாறு ரூபாய்