பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 255 ஆகையால், அதைக் கிரமப்படி நடத்தவும், வைத்தாளவும் தேவையான அநுபவம் அவனுக்கு இராது. அது முடிவில் அவனுக்குக் கெடுதலே செய்யும். மனிதன் உழைத்து உழைத்துக் காலக்கிரமத்தில் பொருள் தேடிச் சேர்ப்பானாயின் அதன் அருமை அவனுக்கு நன்றாகத் தெரியும். அதை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டுமென்றும், கெட்ட வழிகளில் விரயம் செய்யக் கூடாதென்றும், அவனுக்கு வேறே எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. மகாப்பிரபுவே! தங்களுக்குத் தெரியாத உலக வியவகாரம் நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேனா. இல்லை. எஜமானே! எனக்கு இவ்வளவு பெருத்த செல்வம் வேண்டாம், இது என்னைக் கெடுக்காவிட்டாலும், இதை வைத்துக் காப்பாற்றும் வல்லமை எனக்கு இல்லை. இதைப் பார்த்து ஒழுங்காயிருக்கும் மற்றவர் துராசை கொண்டு இதை அபகரிக்க வேண்டுமென்று ஏதேனும் மோசத்திலும் திருட்டிலும் கொலையிலும் இறங்கிக் கெட்டுப் போவார்கள். இது என்னையும் கெடுக்கும்; பிறரையும் கெடுக்கும். ஆகையால், இதைத் திருப்பி ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த ஏழையின்மேல் தங்கள் அன்பும் பட்சமும் மாறாமல் - நீடித்து இருக்குமாயின், அதைக் காட்டிலும் நான் அடையத் தகுந்த பெருஞ்செல்வம் வேறொன்றும் இராதென்று நினைக்கிறேன்” என்று கூறி எழுந்து கை கட்டி வாய்புதைத்து நின்றான். அவனது குணத்தழகையும், சொல்லழகையும் கண்ட திவான் முற்றிலும் பிரமித்து அளவற்ற மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்து மிகுந்த வாஞ்சையும் உருக்கமும் தோன்ற, "அப்பா கந்தசாமீ. நான் என்னுடைய அநுபவத்தில் எத்தனையோ விதமான குணமுடைய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு ஏழ்மையிலிருந்தும், பணத்தைக் கேவலம் துச்சமாக மதித்து அலட்சியமாய் விலக்கிய மனிதனைப் பார்த்ததே இல்லை. ஆகா இதுவல்லவோ குணம் இதுவல்லவோ தெய்விகச் செல்வம்! மனிதனுக்கு உள்ளதைக் கொண்டு திருப்தி அடையவேண்டுமென்ற மன அமைதியும், நிராசையும் ஏற்பட்டு விடுமானால், அவனிடம் ஒரு செல்லாக்காசுகூட இல்லை. ஆனாலும், செல்வத்தில் அவனே குபேரன், புத்தியில் அவனே