பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 செளந்தர கோகிலம் பிரஹஸ்பதி, அவனே சகலமான உத்தம குணங்களும் வாய்ந்த மகான் நம்முடைய தேசத்தில் பூர்விக காலங்களில் இருந்த மகரிஷிகளும் தபோதனர்களும் இந்த நிலைமையை அடைவதற் காகவேதான் தமது ஆயுள் காலத்தையே செலவிட்டனர். மனிதன் இக பரம் ஆகிய இரண்டிலும் rேமப்படுவதற்கு இதுவே சூrசமமான வழி. எப்பேர்ப்பட்டவருக்கும் சித்திக்காத இந்த அரிய குணம் உன்னிடத்தில் இருப்பதைக் காண்பது எனக்கு நிரம்பவும் ஆநந்தமாக இருக்கிறது. அப்பா கந்தசாt இந்தக் குணத்தை மாத்திரம் நீ எப்போதும் கைவிடாமல் நடந்து வந்தால், உனக்குக் கடவுள் ஒரு குறைவையும் வைக்கமாட்டார். ஒரு மனிதனுக்கு ஏராளமான செல்வம் இருக்குமானால், அவன் அதை நல்ல வழியில் செலவிடவேண்டுமென்று நீயே கொஞ்ச நேரத்துக்குமுன் சொன்னாயல்லவா. எனக்குக் கடவுள் அபாரமான செல்வத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், சாப்பிடுவதற்கு என் குடும்பத்தில் மனிதர்கள் அதிகமாக இல்லை. இருப்பவருக்கும், வயிறு கிடையாது. மிச்சப்படுவதை வைரங்களில்போட்டு நகைகளாக மாற்றி என் சம்சாரத்தின் உடம்பில் தொங்கவிட்டிருக்கிறேன். இன்னமும் மேன்மேலும் செல்வம் வந்துகொண்டே இருக்கிறது. என் சம்சாரத்தின் உடம்பில் நகைகள் போட இனி இடமே இல்லை. இந்தப் பொருளை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்கிறது. நல்ல சற்பாத்திரமான மனிதர்களாய்ப் பார்த்து அவர்களுக்குத் தக்க அளவு கொடுப்பதைத் தவிர, நான் இதை நல்ல வழியில் எப்படிச் செலவிடுகிறது. என்னிடம் சன்மானம் பெற உன்னைப் போன்றவர்கள் தவிர, மற்ற எவர் அருகரானவர்? நீ இதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டால், இந்தப் பொருள் எதற்கும் உபயோகப்படாமல் துருப்பிடித்து ஒரு மூலையில் கிடக்க வேண்டியதாகவே முடியும். ஆகையால், நீ தயவு செய்து இதை வாங்கிக்கொள்ளப்பா! நீ மாத்திரம் உறுதியான மனப்போக்கு உடையவனாக இருந்தால், இந்த அற்பச் செல்வம் உன்னை ஒரு நாளும் கெட்ட வழியில் விடாது. நீ அவசியம் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிடில், என் மனம் வெகு நாளைக்கு இதை நினைத்து விசனப்பட்டுக்கொண்டே இருக்கும்” என்றார்.