பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 257 அதைக்கேட்ட கந்தன் மறுபடி அவரை வணக்கமாகக் கும்பிட்டு, 'எஜமானே! தாங்கள் இந்த ஏழையை ஒரு பொருட்டாய் எண்ணி, இவ்வளவு தூரம் மதிப்பாய்ப் பேசும் போது நான் தங்களுடைய ஆக்ஞையை மீறி நடப்பது சரியல்ல. பணத்தை அடியோடு விலக்கிவிட்டுக் காட்டில் போய் சருகைத் தின்று நிர்வாணத்தோடிருந்து தவம் செய்யும் நிலைக்கு நான் இன்னும் வரவில்லை. என் மனசை விட்டுப் பொருளாசையும் போய்விடவில்லை. ஆனாலும் நான் சம்பாதிப்பதை நாணயமான வழியில் உழைத்துச் சம்பாதிக்க வேண்டுமென்பது என் கொள்கையென்று நான் விக்ஞாபனம் செய்துகொண்டேன். அவ்வளவேயன்றி வேறல்ல. நான் இதை அவசியம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று தாங்கள் மனப்பூர்வமாக எண்ணுகிறபடியால் அப்படியே நான் இதை எடுத்துக்கொண்டு இதை நல்ல வழியில் உபயோகப்படுத்த முயற்சி செய்கிறேன். இனி நானும் என் குடும்பத்தாரும் சாப்பிடப்போகும் சாப்பாடு தங்களால் கொடுக்கப்பட்ட பிச்சை. ஆதலால், நாங்கள் ஒவ்வொரு வேளையிலும் சாப்பிட முதல் கவளம் எடுக்கும் போது எங்களுக்கு அன்னமளித்த வள்ளல் நீடுழி வாழ வேண்டுமென்று சொல்லிவிட்டே சாப்பிடுவோம்” என்று கூறித் தனது நன்றியறிதலின் பெருக்கை வெளியிட்டான். உடனே திவான் முதலியார், "அப்பா கந்தசாமி உனக்கு அன்னமளிக்கிறவரும், எனக்கு அன்னமளிக்கிறவரும், இன்னும் மற்றுமுள்ள சகலமான பிராணிகளுக்குப் பசியை அறிந்து அன்னம் அளிப்பவரும் சர்வ பிதாவாகிய கடவுளல்லவா! அவரைத்தான் நீயும் நானும் ஒவ்வொரு வேளையும், ஒவ்வொரு rணமும் நினைத்து அவருக்கே நன்றியறிதல் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். அவருடைய பெருமைக்கு முன் நான் எம்மாத்திரம் அவர் என்னிடம் பொருளைக் கொடுத்து யார் யாருக்குக் கொடுக்கச் சொல்லுகிறாரோ, அவரவருக்கு நான் கொடுக்கவேண்டியவன். நான் எஜமானருடைய வேலையைச் செய்யும் குமாஸ்தாவேயன்றி, முதலாளியல்ல. நீ குமாஸ்தாவைத் தொழுவதைவிட முதலாளியையே தொழு நேரமாகிறது. நீ போய்ப் படுத்துக்கொள். நானும் படுத்துக் கொள்ளுகிறேன்" என்றார். செ.கோ.i-17