பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 செளந்தர கோகிலம் உடனே கந்தன், "அப்படியே ஆகட்டும். நான் உத்தரவு வாங்கிக்கொள்ளுகிறேன். காலையில் பார்க்கமுடியுமோ முடியாதோ, தங்களுடைய பட்சமும், ஆசீர்வாதமும் இந்த ஏழையின்மேல் எப்போதும் மாறாமல் இருக்கவேண்டும்" என்று முடிவாகக் கூறி அவருடைய காலில் விழுந்து வணங்கியபின் அவ்விடத்தை விட்டு அப்பால் சென்று மறைந்துபோனான். அந்த இரவு கழிந்தது. மறுநாள் முத்துசாமி தனது வேலையை ஒப்புக்கொண்டு திவானுக்கு வேண்டிய அன்னபானாதிகளைத் தயாரித்து அவரை உண்பித்தான். அவர் இலைக்கருகில் உட்கார்ந்து போஜனம் செய்துவிட்டதாக பெயர் பண்ணிவிட்டு எழுந்தாரேயன்றி அவருக்குப் போஜனம் முதலிய சகலமான விவகாரத்திலும் ஒருவிதமான வெறுப்பும் விரக்தியும் தோன்றி விட்டன. அவரது மனம் பெருத்த வியாகூலத்திற்கும் கவலைக்கும் இருப்பிடமாய்த் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதை அவரது முகத்தோற்றமே எளிதில் காட்டியது. அவரது கவனம் தமது உத்தியோகக் கடமைகளிலாவது, தமது தேக போஷணையிலாவது, இதர விஷயங்களிலாவது செல்லாமல் தம்மைக் கொல்ல யத்தனித்தவர் யாராயிருப்பர் என்பதையும், காந்திமதியம்மாள் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாளா இல்லையா என்பதையும், அவளுக்கு ஒரு கள்ள நாயகன் இருப்பது உண்மை தானா அல்லவா என்பதையும் எண்ணி எண்ணித் தனக்குத் தானே வாத தர்க்கங்கள் செய்து உண்மையை நிச்சயிப்பதிலேயே சென்று லயித்துப்போயிருந்தது. வெளித்தோற்றத்தில் அவர் வாடி வதங்கித் துவண்டு, நடக்கையிலேயே தூங்குகிறவர் போலக் காணப்பட்டவர். ஆனாலும், அவரது மனத்தில் எத்தனையோ கோடி சேனைகள் எதிர்த்து வெகு மும்முரமாக யுத்தம் நடத்துவது போலக் கோடாதுகோடி எண்ணங்களும், சந்தேகங்களும், யூகங்களும், யுக்திகளும் தோன்றித் தோன்றி ஒன்றோடொன்று பெருத்த முஷ்டி யுத்தம் செய்துகொண்டிருந்தன. அவருக்குத் தெரியாமலேயே அவரைக் கூர்மையாய்க் கவனித்துக் கொண்டிருந்த முத்துசாமி தான் வெளியிட்ட விபரீதச் செய்தி அவரது மனத்தை அரித்துத் தின்றுகொண்டிருக்கிறதென்றும், அவர் ஒரு வேளை தமது உயிருக்கே ஏதேனும் ஹானி செய்து கொள்ள வழி பார்க்கிறாரோவென்றும் நினைத்து, அவர் حریم