பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 25ජු அப்படிச் செய்து கொள்ளாமல் தான் பார்த்துக் கொள்ள Gs GQL p தீர்மானத்துடன் இருந்து வந்தான். ஆயினும் அவன் துணிந்து அவரிடம் மறுபடியும் அந்த விஷயத்தைப் பற்றிய பிரஸ்தாபத்தை எடுக்கவே மனமற்றவனாய் அவரை வெகு கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். அன்றைய தினம் காலை பத்து மணிக்கே தமது போஜனத்தை முடித்துக்கொண்ட திவான் உடனே மோட்டார் வண்டியைத் தயாரிக்கச்செய்து, அதில் ஏறிக்கொண்டு தாம் இன்ன இடத்திற்குப் போகிறோம் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் அவ்விடத்தை விட்டுப் பிரயாணம் புறப்பட்டுத் திருவனந்தபுரத்திற்குப் போய்த் தமது மாளிகையை அடைந்தார். தாம் அவ்வாறு வந்ததாவது, மறுபடியும் அவ்விடத்தைவிட்டுத் திரும்பிப் போனதாவது அண்டையிலிருப்பவர் எவருக்கும் தெரியாதபடி அவர் நிரம்பவும் ஜாக்கிரதையாகவும் மறைவாகவும் நடந்து கொண்டார். தமது மாளிகையை அடைந்தவர் வெகு நேரம் வரையில் தனிமையில் உள்ளே இருந்து, தமக்கு ஆகவேண்டிய சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். இரகசியத்தில் ஒரு தையல்காரனை வரவழைத்து சில முக்கிய மான உடைகளைத் தயாரித்துக்கொண்டார். முக்கியமாக ஒர் உயில் தயாரித்து அதில் தமக்குள்ள சொத்துக்கள் இன்னின்னவை என்றும், தாம் தெய்வச் செயலாய் இறந்து போனால், தமக்குப் பின் தமது தகப்பனார் அவைகளை அடைவதென்றும், தமது மனைவியும் புத்திரனும் கிழவருடைய மனத்திற்குத் திருப்தி கரமாக நடந்து கொள்ளும் பrத்தில், கிழவர் அவர்களைக் காப்பாற்றுவதென்றும், சகலமான சொத்துக்களையும் தமது தந்தை அவரது இஷ்டப்படி விநியோகம் செய்து கொள்ளலாமென்றும், திவான் உயில் எழுதி, அதை முக்கியமான ஓர் இரும்புப் பெட்டியில் வைத்துப் பத்திரமாகப் பூட்டித் திறவுகோலை மற்ற திறவுகோல்களடங்கிய வளையத்தில் கோத்துக் கொண்டார். அவர் தமது ஜாகையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக சுமார் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு நோட்டுகள் வைத்திருந்தார். அவைகளையெல்லாம், அவர் எடுத்து நீளமான வண்டிக்காரன் பை ஒன்றில் போட்டு அரைஞாண் கயிற்றோடு சேர்த்து இறுக்கிக் கட்டிக்கொண்டார். தையல்காரன் கொணர்ந்து