பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 செளந்தர கோகிலம் னாலும், மதிப்பினாலும் தாங்களும், தங்களுடைய மூத்த குழந் தையான விலையில்லா மாணிக்கமும் அவைகளைப் பாராட் டாமல், கடைசிவரையில் எங்களை மரியாதையாக நடத்திய தன்றி, என் மகனை விடுவிடுப்பதற்குத் தேவையான பிரயத் தனங்களை எல்லாம் செய்து, பையன் திரும்பி வந்தவுடன் இந்தக் கலியாணத்தையும் முடிப்பதாக உறுதிசொல்வதைக் கேட்டு நான் மட்டற்ற ஆநந்தம் அடைந்தேன். ஆனால் தங்க ளுக்கு இன்னொரு பெண் குழந்தை இருக்கிறது. இவ்வளவு தூரம் பங்கப்பட்டவர்களான எங்களைத் தாங்கள் சேர்த்துக் கொண்டிருப்பதனால், செளந்தரவல்லியம்மாளின் கலி யாணத்துக்கு இடையூறு நேரும் என்பது நிச்சயம். அதுவும் தவிர, அந்தத் துருக்கனால் எனக்கு நேரிட்ட அவமானத்தை என் மகன் கேள்வியுறுவானானால், அவன் உடனே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது நிச்சயம்; அதோடு, இவ்வளவு பெருத்த அவமானம் நேர்ந்த பிறகு, உயிர் வைத்துக் கொண்டு மற்ற மனி தருடைய முகத்தில் விழிப்பதற்கு எனக்கே அவமானமாக இருக்கிறது. ஆகையால், இத்தனை துன்பங்களுக்கும் மருந்தாக, நான் என்னுடைய உயிரையே விட்டுவிடத் தீர்மானித்து இன்றைய இரவு 11 மணிக்கு இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு விட்டேன். எவரும் என்னுடைய பிணத்தையும் கண்டுபிடிக்க முடியாதபடி நான் இந்த ராத்திரிக்குள் சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டுவிடுவது நிச்சயம். நீங்கள் என்னை அநாவசியமாக எவ்விடத்திலும் போய்த் தேடி வீண் பிரயாசைப்பட வேண் டாம். நீங்கள் எங்கள் விஷயத்தில் செய்த உபசரணைகளையும், காட்டிய அன்பையும் நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன். மாசில்லாத மணியான செளபாக்கியவதி கோகிலாம்பாளை நான் இந்த ஜென்மத்தில் மருமகளாக அடையும் பாக்கியத்தை அநுபவிக்கா விட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது அதற்கு ஈசன் அருள் உண்டாக வேண்டும் என்ற ஒரே ஒரு பிரார்த்தனையோடு நான் இறக்கப் போகிறேன். அதற்கு ஈசன் அருள் உண்டாகும் என்று பூரணமாக நம்பி இருக்கிறேன். X எனக்குக் கடைசி உதவியாக நான் தங்களிடத்தில் ஒரு மனுச் செய்து கொள்ளுகிறேன். நாளைய தினம் இந்தக் கடி