பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 261 மகவு என்னும் இவையெல்லாம் சந்தையிற்கூட்டம் என்று சொன்னவர் அனுபவமில்லாமல் சொல்லவில்லை. ஆகா! காந்திமதீ! கடைசியாக நீ என்னைவிட்டுப் பிரிந்துபோக மனமற்றவள்போல நடித்தாயே! உன் உயிர் இங்கேயே இருப்பதாகவும், வெறும் உடல் மாத்திரம் போகிறதென்றும் சொன்னாயே! நான் இல்லாத இடத்தில் உனக்குச் சந்தோஷமே உண்டாகாதென்று நீ எவ்வளவோ வேதாந்தமெல்லாம் பேசினாயே! நீ இதுவரையில் செய்ததும் சொன்னதும் பொய் நாடகமாகவல்லவா முடிகின்றன. இருக்கட்டும்! நான் எப்படியும் இதன் உண்மையைக் கண்டு பிடிக்கிறேன்' என்று தமக்குத் தாமே பலவாறு பிரலாபித்துப் பிதற்றுவதும் அழுவதுமாயிருந்த பின், அதிக நேரம் வீட்டில் இருக்கச் சகியாதவராய் அவ்விடத்தை விட்டுவெளிப்பட்டார், வெளிக்கதவைப் பத்திரமாகப் பூட்டி சாவிகளையெல்லாம் ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு மறுபடி மோட்டார் வண்டியில் ஏறி எவரும் அறியாதபடி பிரயாணம் செய்து மாலை நேரத்தில் சநிதொடர் மங்கலத்திற்கு வந்து சேர்ந்து, தாம் திருவனந்தபுரத்திற்குப் போய் வந்தச்செய்தி எவருக்கும் தெரியாதபடியும், தாம் ஏதோ சர்க்கார் விஷயமாக எவ்விடத்திற்கோ போய்விட்டு வந்ததாக எல்லோரும் நினைக்கும்படியும் வார்த்தைகள் கூறி, அன்றைய இராப் போஜனத்தை முடித்துக்கொண்டு படுக்கைக்குச் செல்லுமுன் தமது தலைமை குமாஸ்தாவை வரவழைத்து, "நான் விடியற் காலையில் புறப்பட்டு ஒர் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி காலை 9, அல்லது 10 மணிக்குள் வந்துவிடுகிறேன். திருவனந்த புரத்திலிருந்து தபால்கள் வந்தால் அப்படியே இருக்கட்டும் நான் வந்தபிறகு பிரித்துப் பார்த்துக்கொள்ளலாம். என்னுடைய கொத்துச் சாவியை நான் கையில் கொண்டுபோனதில், அதை நான் அடிக்கடி எங்கேயாவது மறதியாய்ப் போட்டுவிடுகிறேன். அதை நான் இங்கே வேறே பாரிடத்திலும் கொடுப்பது சரியல்ல. நீரே பத்திரமாக அதை வைத்துக் கொள்ளும்; நான் வந்து வாங்கிக் கொள்ளுகிறேன் என்று கூறித் தமது கொத்துச் சாவியை அவரிடம் கொடுத்தார். தலைமை குமாஸ்தா அதை வாங்கிக் கொண்டதன்றி அவரது கட்டளைப்படி நடந்து கொள்வதாகவும் மறுமொழி கூறி உத்தரவு பெற்றுக்கொண்டு தமது இடத்திற்குப் போய்விட்டார்.