பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 285 அதற்குள்ளிருந்த மனிதர் முதல் புரளவிலேயே வெளியில் வந்து வெகுதூரத்திற்கு அப்பால் போய்விழுந்தார். அப்படி அவர் விழுந்ததுதான் தாமசம். அதோ தெரிகிறதல்லவா புதர். அதற்குள்ளிருந்த ஒரு சிறுத்தைப்புலி ஒரே பாய்ச்சலாக அவர் மேல்பாய்ந்து அவரது தொடையைத் தன் வாயால் கெளவி அவரைக் கீழே போட்டுப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்தது. அதைக்கண்ட நான் பதறிப்போய்ப் பெருத்த கூச்சலிட்டு அதைத் துரத்திக்கொண்டு ஒடினேன். அந்தச் சமயத்தில் அந்தப் பெரிய மனிதர் என்னைப் பார்த்து, "ஐயோ! ஐயோ! என் உயிர் போகிறதே! நான் இனி பிழைக்கமாட்டேன். இந்தப் புலியினிடத்திலிருந்து நான் தப்பமுடியாது. நீங்கள் எனக்கு ஒர் உதவி செய்யுங்கள். நான் இந்த சமஸ்தானத்தில் திவான் உத்தியோகம் வகிப்பவன். கொஞ்ச தூரத்திற்கு அப்பாலுள்ள சநிதொடர் மங்கலத்தில் நானும் என் சிப்பந்தி களும் முகாம் செய்துகொண்டிருந்தோம். ஒரு முக்கியமான காரியமாய் நான் மாத்திரம் இங்கே வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இந்தக் கதி நேர்ந்துவிட்டது. நான் இனி தப்பிப் பிழைப்பது சாத்தியமற்ற விஷயம். நீங்கள் உடனே சதிதொடர் மங்கலத்துக்குப் போய் எனக்கு நேர்ந்த கதியை என் சிப்பந்தி களுக்குத் தெரிவியுங்கள். என் பிரதம குமாஸ்தாவிடம் என் கொத்துச்சாவி இருக்கிறது. திருவனந்தபுரத்தில் என் வீட்டில் ஏராளமான சொத்து இருக்கிறது. உடனே போய் வீட்டு வாசல் கதவிலிருக்கும் பூட்டின் மேல் சீல்வைத்து, வீட்டைச் சுற்றிலும் காவல் போடச்செய்து, தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த திருவிடமருதூரிலுள்ள குஞ்சிதபாத முதலியார் என்று பெயர் கொண்ட என் தகப்பனாருக்கு உடனே தந்தி கொடுத்து அவரை வரவழைத்து அந்தக் கொத்துச்சாவியை அவரிடம் கொடுத்து வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் அவரிடம் ஒப்புவிக்கும் படி பிரதம குமாஸ்தாவிடம் சொல்லவேண்டும்" என்றார். அதற்கு மேலும் அவர் ஏதோ சொல்ல எத்தனிக்க, அதற்குள் அவருக்கு பிரக்ஞை தவறிப் போய்விட்டது. பிறகு அவருடைய வாய் குழறிப்போய் மூடிக்கொண்டது. அப்போது நான் துரத்திக் கொண்டு வந்ததைக் கண்ட புலி அவரைக் கீழே வைத்துவிட்டு என்னையும் துரத்த ஆரம்பித்தது. நான் பயந்துகொண்டு