பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 செளந்தர கோகிலம் ஒட்டமாக ஓடிவந்துவிட்டேன். மறுபடி அந்தப் புலி அவரைத் தூக்கிக்கொண்டு போனதை நான் துரத்திலிருந்து பார்த்தேன். பக்கத்தில் ஏதாவது ஊர் இருந்தால், நான் வந்து சொல்வி மனிதர்களை உதவிக்கு அழைத்துக்கொண்டு வரலாமென்று. நினைத்து ஒடி உங்களுடைய ஊருக்கு வந்தேன். அவ்வளவுதான் சங்கதி’ என்று உளறிக் குழறித் திணறித் திக்கு முக்கலாடிக் கூறினார். அந்த வரலாற்றைக் கேட்ட மற்ற ஜனங்கள் எல்லோரும் துடிதுடித்துப் போய் மூலைக்கொருவராய்ப் பிரிந்து ஒடி வெகுதூரம் வரையில் சென்று பார்த்தனர். அந்த இடம் புல் டத்தைகளும், கருங்கல்லுமே நிறைந்த தரையாக இருந்தமையால், புலியின் கால்சுவடுகள் தரையில் பதிந்திருக்க வகையில்லாது போயிற்று. சுமார் அரைநாழிகை காலம் வரையில் ஜனங்கள் வெகுதூரம் வரையில் சென்று புதர்களிலும், குகைகளிலும் தேடிப் பார்த்துப் பயனற்று வாடிய முகமும் ஏங்கிய மனதுமாய்த் திரும்பி வந்து சேர்ந்தனர். சிறுத்தைப் புலி திவானைக் கொன்று தின்று விட்டதென்று அவர்கள் தீர்மானித்துக்கொண்டு அதற்குமேல் தாம் என்ன செய்வதென்பதைப்பற்றிச் சிந்தனை செய்யலாயினர். சிலர் மோட்டார் வண்டியை மேலே ஏற்றி ஊருக்குக் கொண்டுபோக வேண்டுமென்றனர். உடனே கிராம முனிசீப்பு மற்றவர்களை நோக்கி, "நாம் அப்படிச் செய்வது சரியல்ல. சட்டப்படி நான் இதைப்பற்றிப் போலீசாருக்கு எழுதவேண்டும். நல்ல வேளையாக, நம்முடைய போலீஸ் ஸ்டேஷன் எந்த ஊரில் இருக்கிறதோ அதே ஊரில் இந்தத் திவானுடைய சிப்பந்திகள் இப்போது இருக்கிறதாக அவர் சொன்னாராம். நாம் நம்முடைய ஊருக்குப் போவோம்; போலீசார் வந்து இந்த ஸ்தலத்தையும் வண்டியையும் பார்க்கிறவரையில், நாம் சில வெட்டியான்களை இங்கே காவல் போட்டு வைப்போம்” என்று கூறிய பின் சில ஆட்களைக் காவலாக நிறுத்திவிட்டு மற்றவரை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுத் தங்களது ஊருக்குச் சென்றார். சென்றவர் உடனே தமது அறிக்கைப் புஸ்தகத்தை எடுத்து அதில் அந்தச் சம்பவத்தைப்பற்றிய விவரம் முழுதையும் தாம் தெரிந்து கொண்டபடி எழுதி அதற்கு மூன்று பிரதிகள் தயாரித்து ஒன்றைத் திருவனந்தபுரத்திலுள்ள மாஜிஸ்டிரேட் கச்சேரிக்கும்,