பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 செளந்தர கோகிலம் மறுபடி அவர் விழித்துப் பார்த்த காலத்தில், பொழுது விடியும் தருணமாக இருந்தது. அந்த ஊர்ப் பெண்பிள்ளைகள் வீட்டு வாசல்களுக்குத் தண்ணீர் தெளிப்பதும் திண்ணைகளைப் பெருக்குவதுமாக இருந்தனர். திவான் சாமியாரது களைப்பு ஒருவாறு நீங்கிப் போயிருந்தது. ஆனாலும், உடம்பு நிரம்பவும் தளர்ந்து இலேசாய்க் காணப்பட்டது. பசி மந்தித்துப் போயிருந்தது. எழுந்து உட்காரவும் அவருக்குச் சக்தி இல்லாமல் போய்விட்டது. ஆயினும் பொழுது விடியும்போது தாம் படுத்திருந்தால் அந்த வீட்டின் சொந்தக்காரர் வந்து கோபித்துக் கொள்வார் என்ற அச்சம் தோன்றியது. ஆகையால், அவர் நலிந்து ஊக்கத்தை உண்டாக்கிக்கொண்டு எழுந்து திண்ணையை விட்டிறங்கி, ஊருக்கு வெளியிலிருந்த குளத்தில் இறங்கி நன்றாக நீராடி வெளியில் வந்து விபூதி ருத்ராr மாலைகள் முதலிய வற்றை அணிந்துக்கொண்டார். அவ்வாறு தமது ஸ்நானம் முதலிய கருமங்களை முடித்துக்கொள்ளவே அவரது அயர்வில் பெரும் பாகமும் விலகியது. தாம் எவரிடமாவது விசாரித்து அந்த ஊரில் தமது ஆகாரத்திற்கு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா என்பதை அறியவேண்டுமென்ற தீர்மானத்தோடு ஊருக்குள் நுழைய, எதிரில் வந்த சில மனிதர்கள் அவரைக் கண்டு அவரது அருள் வழிந்த பெருந்தன்மையான முகத் தோற்றத்தைக் கண்டு அவர் யாரோ உண்மையான மகான் என்று நினைத்து அவரை வணங்கி, ‘சுவாமி! தாங்கள் எந்த ஊர்? இப்போது எங்கே போகிறீர்கள்?’ என்று பயபக்தி விநயத்தோடு கேட்டனர். உடனே திவான் சாமியார் நிரம்பவும் பணிவாகவும் மரியாதையாகவும் அவர்களை நோக்கி, “நான் ஒர் ஏழைப் பரதேசி, உலகத்தில் விரக்திகொண்டு, அதைத் துறந்தவன். எனக்கு இப்போது சொந்த ஊர் கிடையாது. ஊர் ஊராய்ப் போய் ஆங்காங்கு இருக்கும் rேத்திரங்களில் சுவாமி தரிசனம் செய்து, புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, இப்படியே என் காலத்தைக் கடத்த உத்தேசிக்கிறேன். இந்த ஊரில் சுவாமி கோவில் இருக்கிறதா?’ என்றார். உடனே அவர்கள், "இந்த ஊரில் ஒர் அம்மன் கோவில் இருக்கிறது. பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் பெரிய ஊர் ஒன்று இருக்கிறது. அவ்விடத்தில் சிவன் கோவில் இருக்கிறது. அங்கே