பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 2了1 அன்றைய இரவிலும் அவர் அந்த சோற்றுக்கடையிலே தமது போஜனத்தை முடித்துக்கொண்டு பகலில் படுத்திருந்த திண்ணையிலேயே படுத்து இரவையும் கழித்தார். அவரது மனம் முழுதும் காந்திமதியம்மாள், ராஜா பகதூர், தமது தந்தை ஆகிய மூவர் பேரிலும் மாறிமாறிச் சென்று லயித்துப் போயிருந்தது. ஆனாலும், அவரது வாய் ஒயாமல் சிவநாம ஸ்மரணை செய்த படி இருந்தது. மறுநாள் காலையில் அவர் அந்த ஊரிலிருந்த நதியில் தமது ஸ்நானம் அதுவீ டானம் முதலியவைகளை நிரம்பவும் மனோக்கியமாக முடித்துக்கொண்டு முதல் நாளில் செய்ததுபோலவே சுவாமி தரிசனம் போஜனம் முதலியவை களைச் செய்துகொண்டு சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்தார். அவ்வாறு அந்த முகமறியாத புதிய ஊரில் தமது தினப்படிக் காரியங்களை அவர் யதோக்தமாகச் செய்து பொழுதைப் போக்கியது அவருக்கு ஒருவிதத்தில் ஆறுதலாக இருந்தது. ஆகையால், தாம் சொற்பகாலம் அந்த ஊரிலேயே செளகரியமாக இருந்து பிறகு புறப்பட்டுப் போகலாம் என்ற நினைவு தோன்றியது. அவ்வாறே செய்யவேண்டுமென்று அவர் தீர்மானித்துக் கொண்டு இரண்டாவது தினத்தையும் அதே ஊரில் போக்கினார். மறு நாளாகிய மூன்றாவது தினம் காலையில் அவர் தமது ஸ்நானம், அதுஸ்டானம், சிவபூஜை முதலியவற்றை முடித்துக்கொண்டு சோற்றுக்கடைக்குப் போய் இலையில் உட்கார்ந்து போஜனம் செய்துகொண்டிருந்த காலத்தில் அவரைச் சூழ்ந்த நாற்புறங்களிலும் பந்தி பந்தியாக இலைகள் போட்டிருந்தன. பல மனிதர்கள் உட்கார்ந்து ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றித் தமக்குள் சுவாரஸ்யமாக சம்பாவித்த வண்ணம் உண்டுகொண்டிருந்தனர். திவான் சாமியார் சுய நினைவுகளிலேயே தமது கவனத்தைச் செலுத்திய வண்ணம் இலையில் உட்கார்ந்து போஜனம் செய்து கொண்டிருந்தாலும் அங்கு பேசப்பட்ட விஷயம் அவரது கவனத்தை உடனே கவர்ந்துகொண்டது. திவானுக்கெதிரில் உட்கார்ந்து போஜனம் செய்த ஒருவர் அவருக்குப் பக்கத்திலிருந்த இன்னொருவரைப் பார்த்து, 'ஏனப்பா! நாராயணசாமி திருவனந்தபுரத்துச் சங்கதியெல்லாம் கேள்விப்பட்டாயா?" என்றார். நாராயணசாமி 'இல்லையே! ஏன் என்ன விசேஷம் வேலாயுதம்?” என்றார்.