பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 செளந்தர கோகிலம் வேலாயுதம் நிரம்பவும் ஆச்சரியமாக, “என்ன விசேஷமா?. சங்கதி ஊர் முழுதும் அடிபட்டுக்கிடக்கிறது. அதை நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே! நம்முடைய முதலைமூஞ்சி சுப்புராயன் இருக்கிறானல்லவா! அவன் ஏதோ ஒரு காரியமாய்த் திருவனந்தபுரத்துக்குப் போய்விட்டு நேற்று இரவில் இங்கே வந்தானாம். அவன் சொல்லுகிறான் சொல்லுகிறான்; வாய் ஓயாமல் சொல்லுகிறான், திருவனந்தபுரத்துத் திவானைப் புவி தூக்கிக்கொண்டு போய்விட்டதாம். அந்தச் சங்கதி தெரிந்தது முதல் அந்த ஊர் அல்லோல கல்லோலப்பட்டுக் கிடக்கிறதாம். ஊரிலுள்ள ஜனங்களெல்லோரும் அதே பேச்சாய்ப் பேசி வாய்விட்டுக் கதறியழுகிறார்களாம். அந்த திவான் இந்தக் கலிகாலத்திலேயே பிறக்காத அவதார புருஷராம். பாரதத்தில் தர்மராஜனைப்பற்றிப் படித்ததெல்லாம் நிஜமாக நடந்ததோ என்னவோ. அவரை நாம் கண்கூடாகப் பார்க்கவில்லை. இவர்தான் தத்ரூபம் தர்மராஜனாய் விளங்கினாராம். ஊரிலுள்ள ஒவ்வோர் ஏழை மனிதனுக்கும் அவர் குறைந்தது ஒவ்வொரு நன்மையாவது செய்திருப்பாராம். மகா சிரேஷ்டமான குணமும், நிரம்பவும் நிதானமான புத்தியும், பெருந்தன்மையும், பூததயை, இரக்கம், பச்சாதாபம் முதலிய குணங்களும், மகா பரிசுத்தமான நடத்தையும், அவரைப் போன்ற திவான் இதுவரையில் இருந்ததில்லையென்றும், இனி இருக்கப் போகிறதில்லை என்றும் ஜனங்கள் சொல்லிச் சொல்லிப் பதறி அழுகிறார்களாம். இரண்டு தினங்களாய் ஊர் முழுதும் ஒரே துயரத்தில் மூழ்கி இருக்கிறதாம். கடைகளெல்லாம் மூடிக்கிடக்கின்றனவாம். அவரவர்கள் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பவும் மனமற்றவராய், 'என்ன உலகம்! என்ன வாழ்க்கை! நேற்று உயிரோடிருந்த தர்மராஜனை இன்று எமன் வாயில் போட்டுக் கொண்டான், அவருடைய செல்வமென்ன செல்வாக்கென்ன, அழகென்ன, குணமென்ன? அவருடைய சம்சாரத்தை மகாலக்ஷ்மி என்றே சொல்லவேண்டும். அவருடைய குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் எத்தனை நாளானாலும் பசியே உண்டாகாது. அப்போர்ப்பட்ட குடும்பம் ஒரு நிமிஷத்தில் சீர் குலைந்து போய்விட்டதே ஈவிரக்கமற்ற கொடிய பாவியான கூற்றுவன் இப்பேர்ப்பட்ட மனிதரை ஒரு நிமிஷத்தில் வாயில்