பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 273 போட்டுக்கொண்டானே! நாமெல்லாம் எந்த மூலை. நாம் எதற்காக உழைத்துச் சம்பாதித்து இந்த வீணுடம்பை வளர்த்துப் போற்றவேண்டும். இப்படியே பட்டினி கிடந்து, நாமும் இறந்து போய்விடுவோம்” என்று சொல்லி அளவிட இயலாத ஸ்மசான வைராக்கியமடைந்து பிரலாபித்து வருந்தித் தவிக்கிறார்களாம். அந்த ஊர் மகாராஜனே இந்தச் சங்கதியைக் கேட்டவுடன் பொறிக்கலக்கமும் சித்தப் பிரமையும் அடைந்து பஞ்சணையில் படுத்தவர் இரண்டு திங்களாய் எழுந்திருக்கவே இல்லையாம். அரண்மனைக் கதவுகளும் மற்றுமுள்ள சகலமான காரியாலயங் களின் கதவுகளும் மூடப்பட்டபடியே இருக்கின்றனவாம்; திவான் இறந்து போய்விட்டார் என்ற செய்தி ஜனங்களுக்கு நம்பிக்கையே படவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார் என்ற சங்கதி எங்கே இருந்தாவது சீக்கிரம் வரும் என்று அவர்கள் இன்னும் அசட்டுத் தனமாக எண்ணிக்கொண்டே இருக்கிறார் களம்” என்றார். அதைக்கேட்ட நாராயணசாமியும் மற்றவரும் மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து அப்படியே ஸ்தம்பித்துப் போய் வேலாயுதத்தின் வாயைப் பார்த்தபடி இருந்தனர். திடீரென்று தம்மை பற்றிய பிரஸ்தாபம் ஏற்பட்டதைக் கேட்ட திவான் திடுக்கிட்டுப் போனார். அரசர் முதல் ஊரிலுள்ள சகலமான ஜனங்களும், தமது குணாதிசயங்களை மெச்சித் தாம் இறந்து போன செய்தியைக்கேட்டு விசனக்கடலில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்ற செய்தி அவரது ஹிருதயத்தில் சுறுக்கென்று தைத்து ஊடுருவிப் பாய்ந்து சகிக்கவொண்ணாத ஒருவித இளக்கத்தையும் மன எழுச்சியையும் உண்டாக்கியது. ஆநந்தத்தினாலோ விசனத்தினாலோ அவரது கண்களில் கண்ணிர் துளித்தது. அவரது முகாரவிந்தம் சரேலென்று மாறி விகாரப் பட்டது. தம்மை எவராகிலும் கவனிக்கப் போகிறார்களோ என்ற அச்சமும் கவலையும் உடனே எழுந்தன. ஆகையால் அவர் தமது இயற்கை நிலைமையைக் கைவிடாமல் எச்சரிப்பாக நடந்துகொண்டதன்றி, அங்கு கூறப்பட்ட விஷயங்களைக் கேட்டும் கவனியாதவர் போல இருந்தார். வேலாயுதம் பேசி நிறுத்தியவுடன் நாராயணசாமி அவரை நோக்கி, "நீ சொல்லும் சங்கதி மகா விபரீதமான சங்கதியாயிருக்கிறதே! திவானையாவது செ.கோ.:1-18