பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 செளந்தர கோகிலம் புலி தூக்கிக்கொண்டு போகிறதாவது! அவருக்கு மாளிகை இல்லையா? பாராக்காரர்கள் இல்லையா? அவர் நடுகாட்டில் தனிமையிலா இருந்தார்? நீ சொல்வது வெள்ளைக் காக்கை பறந்ததென்ற செய்தியாக அல்லவா இருக்கிறது. திவானாவது சாகிறதாவது அவர் இந்நேரம் திரும்பி வந்திருப்பார் என்றார். அதைக் கேட்ட வேலாயுதம் நிரம்பவும் ஆத்திரமாகப் பேகத் தொடங்கி, "சங்கதியைத் தெரிந்து கொள்ளாமல் நீ அவசரப்பட்டு உளறுகிறாயே! இவ்வளவு பெரிய சங்கதியை யாராவது வேண்டுமென்று கட்டிவிடுவார்களா? நீ ஒருத்தன்தான் புத்தி சாலியா திருவனந்தபுரத்திலுள்ள அத்தனை ஜனங்களுக்கும் அறிவில்லையென்று நினைத்துக் கொண்டாயா? ஒரு சங்கதி நிஜமானதா பொய்யானதா என்பதை நிச்சயிப்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு மூளை இல்லாமல் போய்விட்டதென்று எண்ணிக்கொண்டாயா! திவானாவது இனி வருவதாவது. அவரைப் புலி தின்று ஏப்பம் விட்டுவிட்டது. அவர் இந்நேரம் புலியின் இரத்தமாக மாறிப் போயிருப்பார். அவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் ஜில்லாவில் திருவிடமருதூர் என்ற ஸ்தலமாம். அங்கே அவருடைய தகப்பனார் விருந்தாப்பிய தசையில் இருக்கிறாராம். அந்த ஊரிலுள்ள சிவன் கோவிலில் இப்போது திருவிழா நடக்கிறதாம். அதற்காக திவானுடைய சம்சாரத்தையும் குழந்தையையும் அனுப்பும்படி கிழவர் எழுதி இருந்தாராம். திவானுடைய சம்சாரம் உத்தம குணங்களெல்லாம் நிறைந்த புண்ணியவதியாம். புருஷரும் பெண்ஜாதியும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்ததே இல்லையாம். திவான் தம்முடைய தகப்பனார் சொல்லை மீறமாட்டாதவராய் தம் சம்சாரத்தையும் பையனையும் நாலைந்து தினங்களுக்கு முன் ஊருக்கு அனுப்பினாராம். அனுப்பிய அந்த விசனத்தையும் ஏக்கத்தையும் பொறுக்கமாட்டாதவராய் திவான் சநிதொடர் மங்கலம் என்ற ஊருக்குப் போய்த் தம் சிப்பந்திகளுடன் முகாம் செய்திருந்தாராம். செய்திருந்தவர் ஏதோ இராஜாங்க விஷயமாய் தம்முடைய மோட்டார் வண்டியில் ஏறிக்கொண்டு தனிமையில் காடுகளும் மலையும் நிறைந்த ஒரு ரஸ்தாவின் வழியாய்ப் போனாராம். மோட்டார் வண்டி திடீரென்று வழிதப்பி பக்கத்திலிருந்த ஆழமான பள்ளத்தில் இறங்கித் தலைகுப்புறச் சாய்ந்து உருண்டு