பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 275 புரண்டு பாதாளத்துக்குப் போய்விட்டதாம். திவான் ஒரு பக்கத்தில் போய் விழுந்தாராம். அப்போது அவ்விடத்தில் புதரிலிருந்த ஒரு சிறுத்தைப்புலி வந்து அவர்மேல் பாய்ந்து அவரைத் தூக்கிக் கொண்டு ஒடிப்போய்விட்டதாம்’ என்றார். நாராயணசாமி, 'இது தனிக்காட்டில் அல்லவா நடந்தது! அதை யார் பார்த்தது? எல்லாம் யூகம்தானே?’ என்றார். வேலாயுதம், 'இல்லையப்பா இல்லை. அந்தச் சமயத்தில் யாரோ ஒரு பரதேசி அந்த வழியாக வந்தானாம். புலி திவானைத் துக்கிக் கொண்டு ஒடினதைக் கண்டு அந்தப் பரதேசி கூச்சலிட்டு அதைத் துரத்தினானாம். அப்போது திவான் அந்தப் பரதேசியிடம் தம்முடைய வரலாற்றை இரண்டொரு வார்த்தையில் சொன்னாராம். அதற்கு மேல் திவானுக்குப் பிரக்ஞை இல்லாமல் போய்விட்டதாம். புலி திவானைக் கீழே போட்டு விட்டுப் பரதேசியைத் துரத்தியதாம். பரதேசி செத்தேன் பிழைத்தேனென்று ஒட்டம் பிடித்து பக்கத்திலிருந்த ஊருக்கு வந்து இந்தத் தகவலைக் கிராம முனிசிப்பிடம் சொன்னானாம். உடனே ஜனங்களோடு கிராம முனிசீப்பு போய்ப் பார்த்து, அது நிஜமென்று கண்டு உடனே போலீசாருக்கும், மாஜிஸ்டிரேட்டுக்கும் எழுதினாராம். போலீசார் வந்து பார்த்து மோட்டார் வண்டியை வெளிப்படுத்தி அதைத் திருவனந்தபுரத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்களாம். திருவிடமருதூருக்கு உடனே தந்தி போயிற்றாம். திவானுடைய தகப்பனார் மாத்திரம் மோதியடித்துக் கொண்டு நேற்றையதினம் திருவனந்தபுரத்துக்கு வந்து தம்முடைய பிள்ளையிருந்த இடத்தைப் பார்த்துப் பார்த்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறியழுது சொத்துக்களையெல்லாம் ஒப்புக் கொண்டாராம். காரியம் இவ்வளவு தூரம் நடந்து போயிருக்கிறது. திவான் திரும்பிவந்து விடுவாரென்று நீ வெகு தாராளமாக உத்தரவு செய்துவிட்டாயே” என்றார். - அப்போது வேறொருவர், “ஏன் ஐயா! இந்தச் சங்கதியைக் கேட்டுக் கிழவர் மாத்திரந்தானா வந்தார்? அவரும் அவருடைய சம்சாரமும் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்ததே இல்லை என்றும். இப்போது பிரிந்ததைப் பற்றி திவான் நிரம்பவும்