பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 செளந்தர கோகிலம் என்ற நினைவினால் அவர்கள் அவ்வாறு பார்த்தனர். அவர்கள் தம்மைப் பார்க்கின்றனர் என்பதை திவானும் உணர்ந்தார். அவர்கள் தம்மீது அதிக கவனம் செலுத்தும்படி விடுவது உசிதமல்லவென்று நினைத்த திவான் தமது போஜனத்தை அவ்வளவோடு முடித்துக்கொண்டு உடனே எழுந்து தண்ணிர்ச் செம்பை எடுத்துக்கொண்டு கையலம்பும் பொருட்டுப் பின்பக்கத்திற்குச் சென்றார். அப்போது நாராயணசாமி வேலாயுதத்தைப் பார்த்து, "இந்தப் பரதேசி யாரப்பா? மற்றப் பரதேசிகள் ஊருக்குள் பிச்சையெடுத்துச் சாப்பிடுவார்கள். இவர் பணங்கொடுத்துச் சோற்றுக்கடையில் சுகமாகச் சாப்பிடுகிறாரே! இவர் பணக்காரப் பரதேசி போலிருக்கிறதே. இவர் உலகைத் துறந்திருப்பது புது மாதிரியாக இருக்கிறதே' என்றார். இன்னொருவர், 'ஒருவேளை இந்தச் சாமியார்தான் திவான் இறந்ததைப்பற்றி கிராம முனிசீப்புக்குச் செய்தி சொன்னவரோ என்னவோ என்றார். வேலாயுதம், 'இவருடைய முகத்தையும், இவர் பேசுவதையும் பார்த்தால், இவர் இங்கிலீஷ் நாகரிகம் அறிந்த பரதேசியாகத் தோன்றுகிறார். இவர் தம்முடைய வாயைத்திறந்து யாரோடும் பேசுகிறதையே காணோமே!” என்றார். அவ்வாறு அவ்விடத்தில் நடந்த சம்பாஷனை முழுதையும் நன்றாகக் கேட்டுக்கொண்டே பின்புறத்தில் கையலம்பிக் கொண்டிருந்த திவான் அதை விரைவாக முடித்துக்கொண்டு உள்ளே வந்து செம்பை வைத்தபின், சோற்றுக்கடைக்காரருக்குச் சேரவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு. விசையாக நடந்து அந்த இடத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டார். சென்றவர் தாம் எவ்விடத்திற்குப் போகிறோம் என்பதை எவரும் கண்டு கொள்ளாதபடி, சாமார்த்தியம் செய்து ஆங்காங்கு சிறிதுநேரம் நிற்பதும் உட்காருவதும் எழுந்து மேலே செல்வதுமாய் நடந்து அந்த ஊரை விட்டு வெளிப்பட்டார். அதற்குமேல் தாம் அந்த ஊரில் இருப்பது தமக்கு அபாயகரமாய் முடியுமென்ற எண்ணம் தோன்றியது. ஆகையால், திவான் சாமியார் எவரும் தம்மைக் கவனிக்காதபடி தந்திரமாக அந்த ஊரை விட்டுப் பிரயாணமாகி விரைவாக நடந்து சுமார் பதினைந்து மைல்செல்ல, அவ்விடத்தில் ஓர் ஊர் குறுக்கிட்டது. அந்த ஊரிலும் கோவில்