பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 . செளந்தர കേiിക്കു அந்த மடமயிலாள் அதை வாங்கிப் பிரித்து வாய்க்குள்ளாகவே படிக்கலானாள். அந்த ஒரு நிமிஷமும், அவர்களது மனதிற்கு ஒரு யுகமாகத் தோன்றியது. கோகிலாம்பாள் கட்டிலடங்காத தனது ஆவலில், வெகு சீக்கிரமாக அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, அதைத் தனது தாயிடம் நீட்டி, "இதை நீங்களும் படிக்கலாம். இதில் வித்தியாசம் ஒன்றுமில்லை” என்று கூற, உடனே பூஞ் சோலையம்மாள் ஆவலோடு அதை வாங்கிப் படிக்கலானாள். அவ்வாறு படித்த பிறகு அவர்கள் இருவரும் சிறிது நேரம் மெளனமாகவே இருந்து ஏதோ சிந்தனை செய்தனர். உடனே பூஞ்சோலையம்மாள், 'குழந்தாய்! இதற்கு என்ன யோசனை சொல்லுகிறாய்?" என்று கேட்க, கோகிலாம்பாள் நிரம்பவும் பணிவாகவும், பரிதாபகரமாகவும் பேசத் தொடங்கி, ‘சரி, நம் முடைய பெட்டி வண்டியைத் தயார் படுத்தச் சொல்லுங்கள். நான் போய்விட்டு சீக்கிரமாக வந்து விடுகிறேன். அப்படியே அவருடைய தாயின் கடிதத்தையும் கொடுத்து விட்டு வருகிறேன்” என்றாள். - அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள், 'கண்ணு! நீ போய் வக்கீல் அமர்த்தும் விஷயமாகவும், இந்தக் கேசை நடத்தும் விஷயமாகவும் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு இதைப்பற்றி பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி சொல்லி விட்டு வந்து விடு; இந்தக் கடிதத்தை இப்போது கொடுப்பது பிசகு ஏற்கனவே விசனத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதர் இதைப் பார்த்தால், ஒரு வேளை தம்முடைய உயிருக்கே ஹானி தேடிக் கொண்டாலும் கொள்வார். அவர் விடுபட்டு வந்த பிறகு நாம் இதைக் காட்டுவோம். அதற்குள் நாம் ஆள்களை விட்டு அந்த அம்மாளைத் தேடிப்பார்க்கச் சொல்வோம். ஒரு வேளை, தெய்வச் செயலாக அந்த அம்மாள் உயிரோடு இருந்தால், அது அநுகூலமாகிவிடும். அவரையும் நாம் அநாவசியமான துயரத்தில் ஆழ்த்தவில்லை என்றாவது இருக்குமல்லவா?” என்றாள். அது சரியான யோசனை என்று கோகிலாம்பாள் ஒப்புக் கொள்ள, உடனே பூஞ்சோலையம்மாள் கற்பகவல்லியம்மாளது கடிதத்தை ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு, அவ்வி டத்தை விட்டு வெளியிற்போய்த் தனது ஆட்களை எல்லாம்