பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செளந்தர கோகிலம் போகும் வேலை ஆகாது உபயோகமில்லாமல் திரும்பும்படியாத இருக்கும். விடப்பா, உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்: என்று கூறி நயந்து மன்றாடினான். அந்த ஜவான், 'உள்ளே இருக்கிறது யார் வீட்டு மனிதரப்பா?” என்றான். கோவிந்தசாமி, 'துபாஷ் ராஜரத்தின முதலியார் வீட்டு அம்மாள்' என்றான். அதைக்கேட்ட ஜெவான், 'அப்படியானால் இந்த வண்டியை ஒட்டிக்கொண்டு போய்க்கொண்டே இரு நான் இந்த வண்டிக்காரனை இதோ பக்கத்தில் இருக்கும் ஸ்டே ஷனுக்கு அழைத்துக்கொண்டு போய் இவனுடைய பெயரைப் பதிந்து கொண்டு பின்னால் அனுப்புகிறேன். யாராக இருந் தாலும் நான் விடக்கூடாது; இந்த ஸ்டேஷனுக்கு வந்திருக்கிற சப் இன்ஸ்பெக்டர் ஒரு சிடுமூஞ்சி நாய். இதை நான் சும்மா விட்டால் அவன் என்னைத் தொலைத்து விடுவான்’ என்றான். அதைக்கேட்ட கோவிந்தசாமி தனது பக்கத்தில் இருந்த வண்டிக்காரனைப் பார்த்து, 'ஆமப்பா; அதுதான் நல்ல யோசனை நீ இறங்கிப் போய் பெயரைப் பதிய வைத்து விட்டு வா; நான் ஒட்டிக்கொண்டு மெல்லப் போகிறேன். உனக்கு கொஞ்சம் நேரமானாலும், நீ தங்கசாலைத் தெரு 2075-ம் நம்பர் வீட்டுக்கு வந்து சேர். அங்கேதான் நாங்கள் போகிறோம்” என்று நயமாகக் கூற, உடனே அந்த வண்டிக்காரன் கீழே இறங்கினான். ஜெவான் அவனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஸ்டேஷனுக்குள் போய்விட்டான். கோவிந்தசாமி பெட்டி வண்டியை ஒட்டிக்கொண்டு, அந்தப் பாட்டையின் வழியாகப் போய், தங்கசாலைத்தெருவை அடைந்து, அந்தத் தெருவோடு நெடுந்துாரம்போய், அதற்கு அப்பால் இருந்த வேறொரு மறைவான தெருவிற்குள் நுழைந்து அங்கே காணப்பட்ட ஒரு பெருத்த மாளிகையின் வாசலில் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தினான். - அந்த மாளிகை ஒரு பங்களாவைப்போல, நாற்புறங்களிலும் மதிலினால் சூழப்பட்டதாகவும், உட்புறத்தில் பூங்காவனம் உடையதாகவும் இருந்தது. அதன் வாசலில் இரண்டு போலீஸ் காரர்கள் பாராக் கொடுத்துக் கொண்டு வந்தனர். கோவிந்தசாமி வண்டியை விட்டுக் கிழே இறங்கி பக்கத்தில் வந்து கதவைத்