பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 31 திறந்து விட்டு வணக்கமாக ஒதுங்கி நின்று, 'அம்மா இதுதான் போலீஸ் ஸ்டேஷன் இறங்குங்கள். பலகார மூட்டையை நான் எடுத்துக் கொண்டு வருகிறேன். நானும் முதலியார் ஜாதிதான்' என்றான். அதைக்கேட்ட கோகிலாம்பாள், வாசலில் இரண்டு ஜெவான்கள் நின்றதைக் கண்டு அது போலீஸ் ஸ்டேஷன் என்று நம்பி வண்டியை விட்டு கீழே இறங்கினாள். கோவிந்தசாமி தின் பண்ட மூட்டையை எடுத்துக்கொண்டு, “வாருங்கள்' என்று கூறி அந்த வடிவழகியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். கோகிலாம்பாள் கற்பகவல்லியம்மாள் இறந்து போயி ருப்பாளோ என்ற கவலையிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி உலகத்தையே மறந்தபடி நடந்தாள். ஆதலால், உள்ளே இருந்த வஸ்துக்களையாவது, எந்தெந்த இடத்தின் வழியாகப் போனார்கள் என்பதையாவது உணராமல் இருக்க அவளது தேகம் மாத்திரம் தானாகவே சென்றது. கோவிந்தசாமி அவளை மேன்மாடப் படிகளின் வழியாக முதலாவது உப்பரிகைக்கு அழைத்துப்போய் அங்கே இருந்து ஏறிய படிகளின் வழியாக இரண்டாவது உப்பரிகைக்கு நடத்தி அதற்குள் நுழைந்தான். அந்த இடத்தில் பல அழகிய அறைகளும், கூடங்களும் இருந்தன. அவைகளிற்கெல்லாம் நடு மத்தியிலிருந்த ஒர் அறையைக் காட்டி 'அதற்குள் முதலியார் இருக்கிறார். உள்ளே போய்ப் பேசுங்கள். இந்த மூட்டையையும் இனி நீங்களே எடுத்துக் கொண்டு போங்கள்” என்று கூறிய வண்ணம் சிற்றுண்டி மூட்டையை மரியாதையாகக் கீழே வைக்க, அதை எடுத்துக் கொண்ட அந்தப் பெண்பேதை, தனது ஆருயிர் மணவாளனைக் காண வேண்டும் என்னும் ஆவலில், எவ்விதச் சந்தேகமும் கொள்ளாதவளாய் அந்த அறைக்குள் நுழைய, அதற்கு அப்பால் ஒரு வாசலும், ஒரு அறையும் இருந்தன. கோகிலாம்பாள் முதல் அறையைக் கடந்து அடுத்த அறைக்குள் நுழைந்தவுடனே கோவிந்தசாமி முதல் அறை யின் கதவை மெதுவாக மூடி வெளியில் தாளிட்டு விட்டான். நமது பெண்மணியான கோகிலாம்பாள் இரண்டாவது அறைக்குள் நுழைய, அது சிறைச்சாலைப்போலக் காணப்படா