பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8-வது அதிகாரம் மதி கானா இரவோ! மழை காணா இளம்பயிரோ! கிலாம்பாள் என்ற நமது ஏந்தெழில் மடவன்னம் ஆ அமர்ந்து சென்ற பெட்டி வண்டியின் சாரதியும் போலீஸ் ஜெவானும் ஆனைகவுணி போலீஸ் ; ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டரிடம் போய் 经 ஆஜராயினர். அவர் ஜெவானை நோக்கி கம்பீரமாக நிமிர்ந்து பார்த்து, 'யார் இவன்? என்ன விசேஷம்?' என்று கேட்க, ஜெவான், 'எஜமானே! இவன் புரசைப்பாக்கம் துபாஷ் ராஜரத்ன முதலியாருடைய வண்டிக்காரன். அவருடைய வீட்டு ஜனங்களைப் பெட்டி வண்டியில் வைத்து ஒட்டிக்கொண்டு வந்த இவன் இடது பக்கமாக வராமல் வலது பக்கமாக வந்தான். அதற்காக இவனை சார்ஜ் செய்து அழைத்துக்கொண்டு வந்தேன்' என்று பணிவாகவும் மரியாதையாகவும் கூறினான். உடனே சப் இன்ஸ்பெக்டர், “வண்டி எங்கே?' என்றார். ஜெவான், "எஜமானே! வண்டியில் இருந்த அம்மாள் எங்கேயோ நிரம்பவும் அவசரமாய்ப் போகவேண்டுமாம். அதனால் அவர்கள் இவனை அனுப்பிவிட்டு, வண்டியை ஒட்டிக்கொண்டு போய் விட்டார்கள். நான் வண்டியின் நம்பரைக் குறித்துக் கொண்டு வந்தேன்” என்றான். சப் இன்ஸ்பெக்டர் வண்டிக்காரனை நோக்கி, "ஏனடா! அடேய்! வண்டியை நீ வலது பக்கமாக ஏன் ஒட்டினாய்?" செ.கோ.ii-3