பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 35 சப் இன்ஸ்பெக்டர் மறுபடியும் புரளியாக நகைத்து, 'உன்னை வெளியில் அனுப்பிவிட்டால், அதன் பிறகு ஜாமீன் எதற்காக? வெளியில் உன்னை விட்டால், நீ மறுபடி திரும்பி வரமாட்டாய் என்ற அவநம்பிக்கையினால்தானே நாங்கள் ஜாமீன் கேட்கிறோம். அதைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறாயே" என்றார். - முருகேசன், “எங்கிளுக்கு என்னாசாமி தெரியும். நாங்க படிக்காத முட்டாளுங்கதானே. எங்கிளுக்கு எல்லாத்தியும் நீங்கதாஞ்சாமி சொல்லிக் குடுக்கணுங்க. ஏஞ்சாமி! நானு பயந்து ஒரு கேவி கேக்கறேனுங்க. எங்க மணிசருக்குத் தெரியாம என்னெ நீங்க நடுப்பாதையிலே புடிச்சிகினிங்க, என்னெயும் உடமாட்டேண்டுறீங்க. நீங்களும் இத்தெ வுட்டு வர மாட்டேண்டுறீங்க. எனக்கு வேண்டிய மனுசரு அவுங்கதான். அவுங்க ஊட்டுலே இருக்காங்களே. எனக்கு சாமீனு குடுக்கணுமின்னு அவுங்களுக்கு சோசியம் தெரியுமா சாமீ! அவுங்களே எப்படி வருவாங்க சாமீ!” என்றான். அதைக்கேட்ட சப் இன்ஸ்பெக்டர் கோபங்கொண்டு, 'அடேய்! என்ன அதிகப் பிரசங்கித்தனமாய்ப் பேசுகிறாய்! நிறுத்து உன் குறும்பை. உன்னைச் சேர்ந்தவர்கள் அவர்களாக இந்தச் சங்கதியைத் தெரிந்துகொண்டு வந்து ஜாமீன் கொடுத்தால்தான், நாங்கள் உன்னை விடலாமேயன்றி, நாங்கள் ஜாமீனுக்காக உன்னோடு கூட வந்து அலையவும் முடியாது; எங்களுக்கெல்லாம் வேறே முக்கியமான வேலையிருப்பதால், நீ சொல்லும் இடத்திற்குப் போய் உனக்கு ஜாமீன் கொடுக்க மனிதரை அழைத்துவரவும் முடியாது. உன்னுடைய மனிதர்கள் உன்னைத்தேடி, நீ இங்கே இருப்பதாகத் தெரிந்துகொண்டு வந்து ஜாமீன் கொடுக்கிறவரையில் நீ லாக்கப்பில் இரு' என்று கூறினார். அதைக்கேட்ட வண்டிக்காரன் நிரம்பவும் பணிவாகப் & 4 பேசத் தொடங்கி, எசமானே! நானு அப்பிடி நாடோடி கீடோடி இல்லீங்க தக்க பெரிய மனி சரு வூட்டுலே இருக்கறவனுங்க. வண்டி நம்பரே நீங்க தெரிஞ்சுக்கினிங்க.