பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செளந்தர கோகிலம் என்னெப் புடிச்சாந்த இந்த ஐயாவே நான் அந்த ஊட்டுவே ரொம்ப காலமா வேலெயிலே இருக்கறத்தெப் பாத்திருக்காங்க என்னோடெ ரோக்கியதெப் பத்தி இந்த ஐயாவையே கேட்டுப்பாருங்க. நான் அப்படியெல்லாம் தப்புத் தண்டாவுக்குப் போகப்பட்டவன் இல்லீங்க. இந்தக் குத்தத்துக்கு இண்ணெக் கெல்லாம் போட்டா அஞ்சுரூவா அவராதம் போடப் போறாங்க. அதுக்காவ பயந்துக்கினா நான் இந்த உத்தியோவத்தையும் பொஞ்சாதி புள்ள குட்டிங்களையும் உட்டுப்புட்டு ஒடி ஒளிஞ்சிக்கப் போறேனுங்க? பாதகமில்லிங்க நானே சொந்த சாமீனு குடுக்கறேனுங்க, எசமானே! தயவு பண்ணுங்க. நானு அவசரமாய் போவனுங்க. எசமானரு ஊட்டுக் கொயந்தே தனியாப் போவுதுங்க. அப்பாலே, ஏதாச்சும் ஒவித்திரியம் வந்திச்சின்னா, அவுங்க என்னெ மாட்டிக்கிவாங்க. சாமி சாமீ. கொஞ்சூண்டு தயவு பண்ணுங்க” என்று கெஞ்சிக் கூத்தாடினான். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் அவனைப் பிடித்து வந்த ஜெவானை நோக்கி, "என்ன ஒய்! இவனை உனக்குத் தெரியுமா? விடலாமா?” என்றார். ஜெவான், “இவனும் மினியன் என்ற இன்னொருவனும் வெகுகாலமாய் அந்த ராஜரத்ன முதலியார் வீட்டில்தான் இருந்து வருகிறார்கள். இருவரும் யோக்கியர்கள்தான். இவனுடைய சொந்த ஜாமீனிலேயே இவனை விடலாம்” என்றான். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் சிறிது நேரம் ஏதோ யோசனை செய்தபின் வண்டிக்காரனைப் பார்த்து, " அடே முருகேஸ்! மினியன் என்று இன்னொரு வண்டிக்காரன் இருக்கிறானாமே. அவன் இப்போது எங்கே இருக்கிறான்?" எனறாா. முருகேசன், "ஆமாஞ் சாமீ. அவன் இப்ப எங்க எசமானர் வங்களாவுலேதான் இருக்கறானுங்க. அவன் சாதியிலே பறையன். நானு செம்படவனுங்க. இப்ப வண்டியிலே என்னோடே கூட ஒரு மொதலியாரைய்யாவும் ஒக்காந்து வரவேண்டி இருந்திச்சுங்க. அதுக்காவ, மினியனை அனுப்பாமே, என்னெ அனுப்பிச்சாங்க. மொதலிமாருங்க,