பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 செளந்தர கோகிலம் தெரு 2075 -ம் நம்பர் வீட்டிற்குப் போவதாகக் கோவிந்தசாமி சொல்லியது அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. ஆதலால், தான் விரைவாக அங்கே சென்றால், அவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நினைவு உண்டானது. ஆகையால், முருகேசன் ஒட்டமும் நடையுமாக வேகமாய்ச் சென்று கால் நாழிகை நேரத்தில் தங்கசாலைத் தெருவை அடைந்தான். அந்தத் தெருவோ தெற்கு வடக்கில், ஒன்றேகால் மைல் நீளமிருக்கிறது. அந்தத் தெருவின் இரண்டு பக்கங்களிலும் மொத்தத்தில் சுமார் 520 வீடுகள் இருக்கின்றன. நமது முருகேசன் சென்ற ரஸ்தா தங்கசாலைத் தெருவின் நடுமத்தியில் போய்ச் சேர்ந்தது. ஆகையால், அவன் அந்தத் தெருவின் இரண்டு கோடிகளிலும் தனது பார்வையைச் செலுத்தி, எந்த வீட்டிலாவது தங்கள் பெட்டி வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறதோ வென்று நன்றாகக் கவனித்துப் பார்த்தான். கண்காணும் தூரம் வரையில் அந்தப் பெட்டி வண்டி காணப்படவில்லை. உடனே அவன் அங்கிருந்த வீடுகளின் நம்பர்களை விசாரிக்கத் தொடங்கியதன்றி, 2075-வது நம்பர் வீடு எங்கே இருக்கிறதென்று சிலரிடம் கேட்க, அவர்கள் அந்த வீடு அநேகமாய் வடக்குக் கோடியில்தான் இருக்க வேண்டுமெனக் கூறினர். ஆகவே, அவன் உடனே அங்கிருந்து புறப்பட்டு அந்தத் தெருவோடு ஒட ஆரம்பித்து, வழி நெடுக்க கவனித்த வண்ணமாய்ச் சென்று அரைநாழிகை சாவகாசத்தில் அந்தத் தெருவின் வடக்கு முடிவை அடைந்து கடைசி வீட்டின் நம்பர் என்னவென்று விசாரித்தான். அது இருநூற்றம்பதுக்குமேல் போகவில்லை. அவன் நிரம்பவும் திகைத்துக் கவலைகொண்டு அங்குள்ள வீடுகளில் காணப்பட்ட சில மனிதனிடம் பேச்சுக் கொடுத்து, 2075-வது நம்பர் வீடு எங்கே இருக்கிறதென்று கேட்க, அவர்களும் குழப்பமடைந்து, நிச்சயமான தகவல் எதையும் சொல்ல மாட்டாதவர்களாய், “அந்த வீடு அநேகமாய்த் தெற்குக் கோடியில்தான் இருக்கவேண்டும்; இந்தப்பக்கத்தில் இல்லை” என்றனர். அதைக் கேட்ட முருகேசன் ஏமாற்றமும் கலக்கமுமடைந்து அந்தக் கோடியை விட்டு மறுபடியும் திரும்பித் தெருவோடு தெற்கு திக்கில் ஓடிவரத் தொடங்கினான். அவ்வாறு வந்தவன் வழியில் குறுக்கிட்ட மனிதர்களிடத்தி