பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 செளந்தர கோகிலம் கோகிலாம்பாள் புறப்பட்டுப் போய் அவனைப் பார்ப்பதென்ற முடிவிற்கு வந்திருந்தனர். ஆனாலும், தாயும் மகளும் ஆழ்ந்து யோசனைசெய்து, கற்பகவல்லியம்மாளது கடிதத்தை மாத்திரம் புஷ்பாவதிக்குக் காட்டுவதென்றும், கண்ணபிரானது கடிதத்தை அவளுக்குக் காட்டுவதால் தங்களுக்கு இழுக்கு நேரும் ஆதலால், அதைக் காட்டாமல் மறைத்துவிடுவதென்றும், கோகிலாம்பாள் தங்களுடைய பந்துவான ஒருவரது வீட்டிற்கு ஒர் அவசர காரியத்தின் நிமித்தம் போய்வரப் போகிறாள் என்று சொல்வதென்றும் தீர்மானித்துக்கொண்டிருந்தனர். ஆதலால், புஷ்பாவதியம்மாள் வந்ததைக் கண்டவுடனே அன்பும் மரியாதையும் நிறைந்த குரலில் அவளை அழைத்து உட்காரச் செய்து, கற்பகவல்லியம்மாளது கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தை வாங்கி ஆவலோடு படித்த புஷ்பாவதியம்மாளது மனம் கட்டிலடங்காத பெருங்களிப்பும் இன்பமும் அடைந்தது. ஆனாலும், அவளது முகம் வாட்ட மடைந்து அளவற்ற துயரத்தைத் தோற்றுவித்தது. அந்தச் செய்தியை அவள் எதிர் பார்க்காதவள்போலவும் அதை ஒரு பெருத்த இடிபோலக் கருதுகிறவள்போலவும் தோன்றி, "ஆகா என்ன கால வித்தியாசம் இது இந்த அம்மாள் ஏன் இப்படிப் புறப்பட்டுப் போகவேண்டும்! நாம் யாராவது இவர்களைத் துஷித்தோமா! இவ்விடத்தில் இருக்கவேண்டாமென்று சொன்னோமா! ஏன் இப்படித் திடீரென்று புறப்பட்டு, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் போகவேண்டும் இவர்களு டைய குமாரர் சிறைச்சாலையில் இருக்கிறார். அவரைத் தப்ப வைத்து வீட்டிற்கு அழைத்து வருவதல்லவா அத்யாவசியமான முதல் காரியம். அதைவிட்டு இந்த அம்மாள் தற்கொலை செய்து கொள்வதற்கு இப்போதுதான் சமயம் பார்த்தார்களா சகலமான விஷயங்களையும் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பவர்களாகக் காணப்பட்ட இந்த அம்மாள் இவ்விதமான முடிவுக்கு வந்தது மகா ஆச்சரியகரமாக இருக்கிறது. நம்முடைய கோகிலாம் பாளின் விஷயத்தில் இவர்கள் எங்களுக்குப் போட்டியாக வந்தார்களோ என்ற பொறாமை கொஞ்சம் எங்களுடைய மனசில் இருந்தது. ஆனாலும், இந்த அம்மாளோடு பழகி