பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 செளந்தர கோகிலம் தமையனார் இன்று காலையில் வந்து என்னை அழைத்துத் கொண்டு போவதாகச் சொல்லிவிட்டுப் போனவர் அநேகமாய் இந்நேரம் வாசலில் வந்திருக்கலாம். அவரிடம் நான் இந்தச் செய்தியைச் சொல்லி, அவரும் பல இடங்களில் போய்த் தேடிப் பார்க்கச் சொல்லுகிறேன். முக்கியமாக அவர் இப்போது முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரிக்கும்படி செய்யவேண்டும் ஏனென்றால், அந்த அம்மாளுடைய உயிருக்கு ஏதாவது கெடுதல் நேரிட்டிருந்தால், அந்தச் செய்தி எப்படியும் இந்நேரம் போலீஸ் ஸ்டேஷனிற்கு எட்டி இருக்கும். போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரியாமலிருந்தால் அநேகமாய் அந்த அம்மாள் உயிரோடிருப்பதாகவே நாம் எண்ணிக் கொள்ளலாம்” என்றாள். அவள் அவ்வாறு பேசி வாய் மூடுவதற்குள் ஒரு வேலைக்காரன் வாசற்படியண்டை வந்து நின்று பூஞ்சோலை யம்மாளைப் பார்த்தபடி 'அம்மா! மயிலாப்பூரிலிருந்து சின்ன ஜெமீந்தார் ஐயா வந்திருக்கிறார்கள். அவர்களுடைய தங்கைச்சியம்மாளை அழைத்துக்கொண்டு போகவேண்டுமாம்" என்று கூறினான். அதைக் கேட்ட புஷ்பாவதியம்மாள் துள்ளி யெழுந்து, "ஆ வந்துவிட்டாரா சரி, அவர் என்னை அழைத்துக் கொண்டுபோய் மயிலாப்பூரில் விட்டுவிட்டு வேறே முக்கிய ஜோலியாக ஓரிடத்திற்குப் போகவேண்டுமென்று நேற்றைக்கே சொல்லியிருந்தார். ஆகையால், நான் அவரை அதிக நேரம் காக்க வைப்பது சரியல்ல. நான் உங்கள் எல்லோரையும் விட்டுப்பிரிந்து போகவேண்டியவளாக இருக்கிறேன். ஆனாலும் இங்கே இருக்கும் நிலைமையைக் கவனித்தால், நான் போய்விட்டு வருகிறேனென்ற சொல்லை என் வாயில் வைத்து எப்படிச் சொல்லுகிறதென்பது தெரியவில்லை" என்று கூறியபின், வேலைக்காரனை நோக்கி, "அப்பா நீ போய் ஐயாவை முன் ஹாலில் உட்காரச்சொல்" என்றாள். அதைக் கேட்டுக்கொண்டே வேலைக்காரன் உடனே அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டான். அப்போது பூஞ்சோலையம்மாளை நோக்கி, 'அம்மா பட்டணத்திலுள்ள என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் விட்டிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. ஒரு முக்கியமான காரியத்தை உத்தேசித்து நாங்கள் யாராவது உடனே அங்கே