பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 45 போய்விட்டு வரவேண்டும். இந்தக் கற்பகவல்லியம்மாளைப் பற்றி நிரம்பவும் பரிதாபமாகவும் இளக்கமாகவும் இருக்கிறது. எந்த நிமிஷத்தில் என்ன செய்தி வருமோ என்பது தெரிய வில்லை. ஆகையால், நான் வீட்டைவிட்டு அசையக்கூடாது. நம்முடைய கோகிலாம்பாளைத்தான் ஒரு பெட்டி வண்டியில் வைத்து அனுப்பப்போகிறேன். இன்னும் ஐந்து நிமிஷத்தில் வண்டி தயாராகிவிடும். அவளும் புறப்பட்டுப் போய்விடுவாள். நான் மாத்திரம் தனியாக இருப்பது மனசுக்கு நிரம்புவும் கஷ்டமாயிருக்கும். உங்கள் ஜாகையில் நீங்கள் அவசரமாய்க் கவனிக்கவேண்டிய அலுவல் எதுவும் இல்லாவிட்டால் இன்னும் இரண்டொரு தினம் எங்களோடிருந்துவிட்டுப் போனால், எங்களுக்கெல்லாம் அது ஒரு பெருத்த ஆறுதலாகவும், நன்மை யாகவும் இருக்கும்” என்றாள். அதைக் கேட்ட புஷ்பாவதியம்மாள், “ இந்த மகாகஷட மான சந்தர்ப்பத்தில் உங்கள் எல்லோரையும் விட்டுப்போவது என் மனசுக்கே கொஞ்சமும் சம்மதமில்லாததாகத்தான் இருக்கிறது. இருக்கட்டும், நான் என் தமையனாரிடம் போய், விஷயத்தைச் சொல்லி, என்னை இந்த ஒரு பொழுதாவது இங்கேவிட்டு வைக்கும்படி சொல்லிப் பார்க்கிறேன். எனக்கு அங்கே அவசரமான ஜோலி எதுவுமில்லை. ஆனாலும், நான் இப்பேர்ப்பட்ட புதிய இடங்களில் இருப்பது அவருடைய மனசுக்குப் பிடிக்கிறதில்லை. அதைப்பற்றித் தான் யோசிக்கிறேன். இருக்கட்டும்; நான்போய் இதோ ஐந்து நிமிஷத்தில் திரும்பி வருகிறேன்’ என்று கூறிவிட்டு, எழுந்து வெளியில் போய்க் கால்நாழிகை நேரம் கழித்து, சந்தோஷத்தைக் காண்பித்த முகத்தோற்றத்தோடு திரும்பிவந்து சேர்ந்து, "அம்மா இந்தக் கற்பகவல்லியம்மாளுடைய கடித விஷயத்தை என் தமையனார் கேட்டவுடன் நிரம்பவும் துடிதுடித்துப் போனதன்றி தாம் உடனே போலீஸ் ஸ்டேஷன் முதலிய இடங்களுக்கெல்லாம் போய் இந்த அம்மாளைத் தேடி அழைத்துக்கொண்டு வருவ தாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இந்த நிலைமையில் நான் இங்கே இருப்பது உங்களுக்கு ஒர் ஆறுதலாக இருக்கு மென்றும், அதைப்பற்றி நீங்கள் எங்களை அவமதிப்பாக