பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ! மமை காணா இளம் பிளோ 47 செளந்தரவல்லியம்மாள் அதைப்பற்றி நிரம்பவும் ஆனந்தம் அடைந்தாள். ஆனாலும் அது விஷயத்தில் எவ்விதச் சம்பந்தமும் அற்றவள்போல நடந்து சந்தோஷத்தையாவது விசனத்தையாவது தோற்றுவியாமல் அசட்டையாக இருந்தாள். பூஞ்சோலை பம்மாளோ கவலைகொண்டு, விசனக் கடலில் ஆழ்ந்தவளாய், வாய் ஓயாமல் கற்பகவல்லியம்மாளது குணாதிசயங்களைப் பற்றிப் புகழ்வதும், அவள் உயிருடனிருக்கிறாளோ உயிர் துறந்து விட்டாளோவென்று பலவித யூகங்கள் செய்வதும், அந்த அம்மாளைத் தேடிப் பிடிப்பதற்கான வழிகளைப் பற்றிப் பேசுவதுமாய் இருக்க, புஷ்பாவதியம்மாள் அவளது நோக்கத்தின் படி மறுமொழி கொடுத்து வஞ்சக நடனம் புரிந்து கொண்டே இருந்தாள். தனது தாய் ஒயாமல் கற்பகவல்லியம்மாளைப் பற்றியே பன்னிப் பன்னிப் பேசிக் கொண்டிருந்தது செளந்தர வல்லியம்மாளுக்கு முற்றிலும் அருவருப்பாகவும் துன்பகரமாக வும் இருந்தமையால், அவள் ஏதோ ஒரு பொய் முகாந்திரத்தைக் கூறி அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டாள். அவளது மனநிலைமை இன்னபடி இருந்ததென்பதைப் புஷ்பாவதியம்மாள் மாத்திரம் எளிதில் யூகித்து அறிந்து கொண்டாளேயன்றி, பூஞ்சோலையம்மாள் அதைப் பற்றி எவ்வித சம்சயமும் கொள்ளாமல் தனது இதர விஷயங் களிலேயே தன் முழு மனத்தையும் கவனத்தையும் செலுத்தி மிகுந்த விசனமும் கவலையும் கொண்டு தவித்திருந்தாள். பொழுது போய்க் கொண்டே இருந்தது, கோகிலாம்பாள் அந்நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கலாமென்றும், கண்ணபிரானோடு பேசி அவனுக்கு ஆறுதல் கூறி அவனைத் தேற்றிக் கொண்டிருக்கலாமென்றும் பலவாறு அந்த அம்மாள் எண்ணமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வேலைக்காரன் உள்ளே வந்து, 'எஜமானே! வண்டிக்கார முருகேசன் வந்திருக் கிறான்' என்றான். அதைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் திடுக்கிட்டு வியப்படைந்து, 'அவன் மாத்திரமா வந்திருக்கிறான்? வண்டி வரவில்லையா?” என்றாள். வேலைக்காரன், 'ஆம் எஜமானே! அவன் மாத்திரம்தான் வந்திருக்கிறான், வண்டியைக் காணோம்' என்றான்.