பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ 49 செய்வதென்பதையறியாது திரும்பி வந்தது ஆகிய வரலாறு முழுவதையும் அவன் விரிவாகக் கூறினான். அந்த விருத்தாந்தத்தைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் மனக்குழப்பமும் முகவாட்டமும் அடைந்து சிறிது நேரம் பேசாமல் நின்றபின், 'ஏண்டா? உன்னோடு வண்டியில் இருந்த மனிதன் தங்கசாலைத் தெரு 2075-வது இலக்கமுள்ள இடத்திற்கு உன்னை வரச்சொன்னதாகச் சொல்லுகிறாயே! அந்த வீடுதான் உனக்கு அகப்படவில்லையே! அந்தத்தெருவில் போலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறதென்றாவது விசாரித்துக்கொண்டு நீ அங்கே போயிருக்கக்கூடாதா? அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக் குத்தானே போனார்கள்?’ என்றாள். முருகேசன், சாமீ! நானு வண்டியிலே குந்திக்கினு இருந்தது மாத்திரந்தானுங்க, ஒட்டினதெல்லாம் அவுருங்க. வண்டி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவுதுன்னு அவுங்க யாரும் எங்கிட்டச் சொல்லவே இல்லீங்க. ஊட்டு நம்பரெத்தான் அந்த ஐயா சொன்னாரு, அதவுமில்லாமே, தங்கசாலெத் தெருவுல போலீஸ் ஸ்டேஷன் எங்கனே இருக்குதுங்க? அந்தத் தெருவிலே ஸ்டேஷனே இல்லீங்களே. நீங்க யாரே ஒனுமானாலும் கேட்டுப்பாருங்க எசமானே!” என்றான். அதைக் கேட்டவுடன் பூஞ்சோலையம்மாள். 'தங்கசாலைத் தெருவில் போலீஸ் ஸ்டேஷன் இல்லையா? நிச்சயந்தானா அது?’ என்று அழுத்தமாக வினவ, முருகேசன், "இல்லீங்க சாமீ! அது எனக்கு நிச்சயமாகத் தெரியும் எசமான். அதைப்பத்தி சந்தேகமே இல்லெ என்று உறுதியாகக் கூறினான். பூஞ்சோலையம்மாள், "சரி; இருக்கட்டும், ஒரு வேளை அதற்குப் பக்கத்தில் எங்கேயாவது ஸ்டேஷன் இருக்கலாம். அவர் கள் அங்கே போய்விட்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள். நீ உன்னுடைய லாயத்துக்குப்போ ஏதாவது காரிய மிருந்தால், நான் மறுபடி உனக்குச் சொல்லியனுப்புகிறேன்” என்று கூறி முருகேசனை அனுப்பியபின் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பி உட்புறம் செல்லலானாள். அப்போது அந்த அம்மாளினது மனதில் பலவகைப்பட்ட எண்ணங்களும் செ.கோ.i-4