பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர கோகிலம் 7-வது அதிகாரம் தொடர்ச்சி விதைக் கோட்டைக்குள் எலி கட்டிலின்மீது விடப்பட்ட கற்பகவல்லியம்மாள் தெளிவ டைந்து தனது இயற்கை நிலைமைக்கு வர அன்றைய தினம் மாலைவரையில் பிடித்தது; பூஞ்சோலையம்மாள், கோகிலாம் பாள், புஷ்பாவதி ஆகிய மூவர் மாத்திரமே மாறி மாறி அவ் விடத்திலிருந்து, அந்த அம்மாளுக்குரிய உபசரணைகள் புரிந்து வந்தனர். பாச்சாமியான் என்னும் முரட்டுத் துருக்கனால் பெருத்த அவமானம் ஏற்பட்ட பிறகு பூஞ்சோலையம்மாள், தனது வேலைக்காரிகளும் அந்தச் சம்பவத்தை அறிந்திருப்பார் களோ என்ற நினைவினாலும், அச்சத்தினாலும் அவர்களை அந்த அந்தப்புரத்திற்கு அழைக்காமல், தானே மற்ற இருவரோடு அங்கே இருந்து கற்பகவல்லியம்மாளது மூர்ச்சையைத் தெளி வித்தனள். நிச்சயதார்த்தத்திற்காக வந்திருந்த பெண்பாலார் அனைவரும் கோகிலாம்பாள் இருந்த இடத்தைவிட்டு வேறொரு மண்டபத்திற்குப் போய் அங்கே இருந்தனரென்று முன்னரே சொன்னோம் அல்லவா? அவர்களும் சிறிது நேரத்திற்குப் பிறகு உண்டான பெருத்த கலகத்தையும் ஆரவாரத்தையும் உணர்ந்து, ஜன்னல்களின் வாயிலாகவும், வெளியில் சென்றும், பாச் சாமியான் சொன்ன சொற்களைக் கேட்டு, மிகுந்த ஆச்சரியமும் திகிலும் அடைந்து ஒருவரோடு ஒருவர் வாய்விட்டுப் பேசவும் மாட்டாமல் வெட்கமும் கலக்கமும் அடைந்தவர்களாய், இனி தாங்கள் அந்தப் பங்களாவில் இருப்பது உசிதமன்று என நினைத்து, ஒவ்வொருவராக எல்லோரும் அந்தச் சாயுங்காலத் திற்குள் அவ்விடத்தைவிட்டுத் தத்தம் வீடுகளிற்குச் சென்றுவிட் டனர். பாச்சாமியான் முதலியோருடன் சென்ற ஆண்பாலரான சகலமான ஜனங்களும் மறுபடியும் பங்களாவிற்குத் திரும்பி வராமலேயே போய்விட்டனர். சுந்தரமூர்த்தி முதலியார் ஒருவர் மாத்திரம் சாயுங்காலத்திற்குப் பிறகு திரும்பி வந்து தாங்களும்