பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5C செளந்தர கோகிலம் உணர்ச்சிகளும் தோன்ற ஆரம்பித்தன. கோகிலாம்பாள் முக்கியமான ஒரு காரியத்தின் நிமித்தம் சென்ற தருணத்தில் நடுவழியில் போலீசாரால் ஏற்பட்ட இடையூறு அபசகுனம் போலத்தோன்றி, அந்த அம்மாளது மனத்தில் உறுத்தியது. ஆனாலும், போலீசார் வண்டியை இழுத்துக்கொண்டு போகாமலும், கோகிலாம்பாளைக் கிலேசத்திற்கு உள்படுத்தா மலும்விட்டு வண்டிக்காரனை மாத்திரம் அழைத்துப்போனது பெருத்த நன்மையென அவள் மதித்து அதைப்பற்றி நிரம்பவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆயினும், அதுகாறும் அன்னிய மனிதரோடு பேசியும், தனிமையில் இருந்தும் அறியாதவளான கோகிலாம்பாள் அதற்கு முன் பழகாத புதுமனிதனான ஒருவனுடன் தனிமையில் விடப்பட்டிருந்ததைக் குறித்து மிகுந்த கவலையும், கலக்கமும், கிலேசமும் அடைந்தாள். ஆயினும், கோகிலாம்பாள் ஒழுங்கான முறையில் நடக்கும் சுபாவம் வாய்ந்திருந்ததோடு, வியவகார ஞானம், புத்திசாலித்தனம், திறமை முதலிய குணங்களும் உடையவளாய் இருந்தமையால், அவள் தான் கருதிச் சென்ற காரியத்தை முடித்துக்கொண்டு எவ்வித இடருமின்றி வெகு சீக்கிரத்தில் திரும்பி வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவாளென்ற உறுதியான நம்பிக்கை அந்த அம்மாளின் மனத்தில் வேரூன்றியிருந்தது. ஆகவே, தான் தன் மனத்தை அடக்கிக்கொண்டு சிறிது நேரம் பொறுத்திருந்தால், கோகிலாம் பாள் நல்ல செய்தியோடு திரும்பி வந்துவிடுவாள் என்ற தீர்மானத்தோடு அந்த அம்மாள் புஷ்பாவதி இருந்த இடத்தை நோக்கி நடந்தாள். அவ்வாறு நடக்கையில் அந்த அம்மாளினது மனத்தில் இன்னொரு முக்கியமான சந்தேகம் எழுந்தெழுந்து வருத்தத் தொடங்கியது. கோகிலாம்பாளைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற அந்த மனிதன் போலீஸ் ஸ்டேஷன் இன்ன இடத்திலிருக்கிறதென்றும், அங்கே வரவேண்டுமென்றும் முருகேசனிடம் சொல்லிவிட்டுப்போக வேண்டியது ஒழுங்காக இருக்க, அதைவிட்டு தங்கசாலைத்தெரு 2075-ஆம் இலக்கமுள்ள வீட்டிற்கு வரும்படி பொய்யான தகவலை ஏன் கொடுக்கவேண்டுமென்ற கேள்வி அடிக்கடி அந்த அம்மாளினது மனத்தில் தோன்ற ஆரம்பித்தது. தான்