பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 செளந்தர கோகிலம் அம்மாளினது தேகம் கட்டிலடங்காமல் துடிதுடித்துப் பறக்கிறது. மனமோ பதறுகிறது. வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களிரண்டும் பூத்துப்போயின. காலையில்கூட எவ்வித ஆகாரமும் சாப்பிடாமல் சென்ற கோகிலாம்பாள் பிற்பகல் நான்குமணி வரையில் பட்டினியாக இருப்பாளேயென்ற நினைவும், அவள் வேறு எவ்விடத்திலும் போஜனம் செய்ய வெட்கப்படும் சுபாவம் உடையவளாயிற்றேயென்ற நினைவும் தோன்றி அந்த அம்மாளது மனத்தைப் புண்படுத்தலாயின. கோகிலாம்பாள் வக்கீலிடம் போயிருந்தாலும், அல்லது, அவரை அழைத்துக்கொண்டு மாஜிஸ்டிரேட்டின் கச்சேரிக்கே போயிருந்தாலும், அந்நேரம் எப்படியும் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்க வேண்டும். ஆதலால், அத்தகைய விபரீதமான கால ஹரணம் ஏற்படுவதற்கு எவ்விதமான முகாந்திரம் இருந்திருக்கும் என்பதை எண்ணியெண்ணிப் பார்த்து, எவ்வித முடிவிற்கும் வரமாட்டாதவளாய்க் கடைசியில் தானே நேரில் புறப்பட்டு, கண்ணபிரான் அடைபட்டிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் அவளைத் தேடிப் பார்க்கவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவளாய், அவள் உடனே வேறொரு வண்டியை ஆயத்தப் படுத்தச் செய்தாள். அப்போதும் புஷ்பாவதியம்மாள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆதலால், அவள் விழித்துக்கொண்டால், தான் ஒர் அவசர காரியமாக வெளியில் போயிருப்பதாகவும், சிறிது நேரத்தில் திரும்பிவந்து விடுவதாகவும் சொல்லி, அவளுக்குத் தேவையான செளகரியங்களைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்குமாறு வேலைக்காரர்களிடம் கூறிவிட்டு, தன்னோடுகூட வேலைக்காரனையும் வேலைக்காரியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள். அந்த அம்மாளது உத்தரவின்படி, வண்டிக்கார முருகேசன் வண்டியை அந்தப் பேட்டைக்குச் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒட்டிக் கொண்டுபோய் வாசலில் நிறுத்தினான். வேலைக்காரன் வண்டியைவிட்டுக் கீழே இறங்கி ஸ்டேஷன் வாசலில் இருந்த ஒரு போலீஸ் ஜெவானுடன் பேசி, முதல்நாள் போலீஸ் இன்ஸ்பெக்டரால், தபால் திருட்டுச் சம்பந்தமாய்க் கைது செய்யப்பட்டவரான கண்ணபிரான் முதலியாரை எந்த