பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 செளந்தா கோகிலம் என்ற யோசனை தோன்றியது. ஆகையால், பூஞ்சோலையம்மாள் வேலைக்காரனை ஸ்டேஷனிற்குள் அனுப்பினாள். அவன் தாழ்வாரத்தில் ஏறி நின்று. கொண்டு சைகைசெய்ய, உட்புறத்தில் நின்ற ஒரு ஜெவான் வெளியில் வந்து, "என்ன விசேஷம்?" என்று வினவினான். உடனே வேலைக்காரன் தாங்கள் கோரி வந்த காரியம் இன்னதென்பதைச் சுருக்கமாக எடுத்துரைத்தான். அதைக் கேட்ட போலீஸ் ஜெவான், தபால் திருட்டுச் சம்பந்த மாகக் கைது செய்யப்பட்ட மனிதனை இன்று காலையிலேயே சப் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்களே. அவன் இப்போது இங்கே இல்லையே!” என்றான். வேலைக்காரன் மிகுந்த பிரமிப்பும் திகைப்பும் மனக் குழப்பமும் அடைந்தவனாய்ச் சிறிதுநேரம் தயங்கி நின்றபின் மறுபடி பேசத் தொடங்கி, “அவரை சப்ஜெயிலுக்கு அழைத்துப் போனபோது காலையில் எத்தனை மணி இருக்கலாம்?" என்றான். - ஜெவான், 'காலையில் ஏழரை, அல்லது எட்டுமணி இருக்கும், நீ ஏன் அந்தத் தகவலைக் கேட்கிறாய்?” என்றான். வேலைக்காரன், “இங்கே வந்து அவரைப் பார்ப்பதற்காக துபாஷ் ராஜரத்ன முதலியார் வீட்டிலிருந்து, ஒர் அம்மாள் வந்தார்கள். அந்த அம்மாள் இந்நேரம் வரையில் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. அந்த அம்மாளைத் தேடிக்கொண்டுதான் நாங்கள் வந்தோம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த அம்மாள் இங்கே வருவதற்கு முன்னதாகவே கண்ணபிரான் முதலியார் இவ்விடத்தைவிட்டுப் போயிருப்பார் போலத் தோன்றுகிறதே!” என்றான். ஜெவான், 'அந்த அம்மாள் எத்தனை மணிக்குப் புறப்பட்டு வந்தார்கள்?’ என்றான். வேலைக்காரன், "அங்கிருந்து அவர்கள் புறப்பட்டபோது ಸ್ತ್ರಣಖ 50TiTL® மணி இருக்கலாம்; அங்கே இருந்து ളുടങ്ങൂ தூரம்வர, ஒர் அரைமணி நேரமாவது பிடித்திருக்கும். இவர் சரியாக எட்டு மணிக்கு முன்னாகவே போயிருந்தால், அதற்குப் பிறகுதான் அவர்கள் இங்கே வந்திருப்பார்கள்.