பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 57 ஒருவேளை அவர்கள் இங்கே வந்து விசாரித்து, அவர் சப் ஜெயிலுக்குப் போய்விட்டார் என்பதைத் தெரிந்துகொண்டு புறப்பட்டு சப்ஜெயிலுக்குப் போயிருப்பார்களோ என்னவோ? என்றான். ஜெவான் சிறிதுநேரம் யோசனை செய்தபின், 'நான் காலையிலிருந்து பகல் 1-மணி வரையில் இங்கே இருந்தேன். பிறகு வீட்டிற்குப்போய்ச் சாப்பிட்டுவிட்டு 2-மணிக்கு வந்தேன். அதுமுதல் இங்கேதான் நான் இருக்கிறேன். இங்கே காலையில் இருந்து பெண்பிள்ளை யாரும் வரவேயில்லை. நீ குறிக்கிற அம்மாள் தனியாக வந்தார்களா? அவர்களுக்கு வயசு எவ்வளவு இருக்கும்?' என்றான். வேலைக்காரன், 'அந்த அம்மாளுக்கு வயசு பதினாறு அல்லது பதினேழுதான் இருக்கும். அவர்கள் பெட்டி வண்டியில் வந்தார்கள். அவர்களோடு வண்டிக்காரன் ஒருவனும், இன்னோர் ஆளும் வந்தார்கள்” என்றான். ஜெவான், 'இன்று காலை முதல் இதுவரையில், பெட்டி வண்டியில் யாரும் இங்கே வரவில்லை. அதுவுமல்லாமல், நீ குறிக்கிறபடி யெளவனப்பிராயமுள்ள அம்மாள் யாரும் இங்கே வந்ததாகவே எனக்கு ஞாபகமில்லை. இங்கே இந்த கண்ண பிரான் முதலியாரை சப்ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் நடுவழியிலேயே யாராவது போலீஸ் காரரிடம் தெரிந்து கொண்டு ஒருவேளை சப்ஜெயிலுக்குப் போயிருக்கலாம். நீங்கள் நேராக சப்ஜெயிலுக்குப் போய் விசாரித்துப் பாருங்கள். அங்கே உள்ளவர்கள் ஏதாவது தகவல் கொடுப்பார்கள்’ என்றான். வேலைக்காரன், “இன்று காலையில் கண்ணபிரான் முதலியார் ஒர் ஆளிடம் ஒரு கடிதம் கொடுத்து அதை எங்களுக்கு அனுப்பினார். தமக்கு வக்கீல் வைக்கும் விஷயமாக நேரில் பேச வேண்டுமென்றும், இங்கேயுள்ள அதிகாரி தம் விஷயத்தில் அபிமானம் வைத்திருக்கிறார் என்றும், அந்த அம்மாள் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் அவர் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தாரே ஏது அவரை இவ்வளவு சீக்கிரமாக