பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 செளந்தர கோகிலம் சப்ஜெயிலுக்கு அனுப்பியது? என்றான். ஜெவான் மிகுந்த வியப்படைந்து, 'ஆ அப்படியா இங்கே அடைபட்டிருந்த முதலியாரா அப்படிக் கடிதம் எழுதியனுப்பினார்? இது நிச்சய மான சங்கதிதானா? கடிதத்தின் எழுத்து அவருடைய எழுத்து தான் என்று நீங்கள் சந்தேகமறத் தெரிந்து கொண்டீர்களா? என்றான். - வேலைக்காரன், "ஆம், அது அவருடைய கைப்பட எழுதப் பட்ட கடிதந்தான். அம்மாதிரி எழுதக்கூடியவர்கள் வேறே யாருமில்லை” என்றான். - ஜெவான், "சரி. அப்படியானால் அவரே கடிதம் எழுதி யாரிடத்திலாவது கொடுத்து அனுப்பி இருக்கலாம். இந்த ஸ்டேஷனுக்கு எஜமானரான சப் இன்ஸ்பெக்டருடைய அனுமதியின்மேல் அவர் அப்படிச் செய்திருக்கலாம். நாங்கள் யாராவது ஒருவரைக் கைதி செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தால் 24 - மணி நேரத்திற்கு மேல் இவ்விடத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது சட்டம். அதுவுமின்றி, அவரைக் காலையிலேயே சப்ஜெயிலுக்கு அனுப்பும்படி பெரிய இன்ஸ்பெக்டருடைய கண்டிப்பான உத்தரவு வந்ததாகவும் கேள்வியுற்றேன். அதனால், அவரை உடனே சப்ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது” என்றான். வேலைக்காரன், 'ஓகோ அப்படியா சங்கதி! ஆனால் நீங்கள் எங்களுக்கு ஒர் உதவி செய்கிறீர்களா? நீங்கள் சொல்வதிலிருந்து, ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர்தான் அந்த முதலியார் விஷயத்தில் அபிமானம் காட்டியவர் என நினைக்க வேண்டியிருக்கிறது. புரசைப்பாக்கம் துபாஷ் ராஜரத்தின முதலியாருடைய வீட்டுப்பெரிய அம்மாள் வந்திருப்பதாக அவரிடம் சொல்லுங்கள். நாங்கள் அவரிடம் போய்ப்பேசி உண்மையான தகவலைத் தெரிந்துகொண்டு போகிறோம்" என்று நயமாகவும் பணிவாகவும் கூறினான். ஜெவான். "சப் இன்ஸ்பெக்டர் இப்போது இங்கே இல்லை. இவர் ஏதோ அவசர காரியமாக வெளியில் போயிருக்கிறார். அவர் திரும்பி வந்தால்கூட, நீங்கள் இதைப்பற்றிக்கேட்டால்,