பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி கானா இரவோ மழை காணா இளம்பயிரோ! 59 அவர் எவ்விதமான தகவலும் கொடுக்கமாட்டார். கண்ணபிரான் முதலியார் இங்கே இருந்த காலத்தில், அவரைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டருக்கு அவருடைய விஷயத்தில் இரக்கம் உண்டாயிருக்கலாம்; அதனால் அவர் ரகளிலியத்தில் ஏதாவது உதவி செய்திருக்கலாம். அவர் இப்போது எங்கள் வசத்தில் இல்லை. இனி அவருக்கும் எங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. ஆகையால், சப் இன்ஸ்ஸ்பெக்டர் தமக்கும் அவருக்கும் எவ்விதமான பரிச்சயமும் இருந்ததாகவாவது தாம் உதவி செய்ததாகவாவது காட்டிக்கொள்ளவே மாட்டார். அவர் எப்பொழுதும் மாவிலும் படாமல் மாங்காயிலும் படாமல் பேசும் தந்திர சுபாவம் உடையவர். ஆகையால் அவர் தமக்கு எந்த விஷயமும் தெரியாதென்றே சொல்லிவிடுவார். அவரைக் கண்டு கேட்பதில் உங்களுக்கு எள்ளளவும் அதுகூலம் ஏற்படவே போகிறதில்லை. அவருக்காக நீங்கள் இங்கே காத்திருக்கும் நேரத்தில் சப்ஜெயிலுக்குப்போய் விசாரித்தால் உங்களுக்குச் சரியான சங்கதி தெரிந்துபோகும். ஆகையால், நீங்கள் புறப்பட்டு நேராக சப்ஜெயிலுக்குப் போங்கள்!” என்றான். அதைக் கேட்ட வேலைக்காரன் சிறிது நேரம் எண்ண மிட்டுத் தயங்கி நின்றபின், "அப்படியானால் நாங்கள் சப் இன்ஸ்பெக்டருக்காகக் காத்திருப்பதில் எவ்வித அநுகூலம் ஏற்படாதென்றா சொல்லுகிறீர்கள்?" என்றான். ஜெவான், 'ஆமப்பா! நான் மலையாள பாஷையிலா சொல்லுகிறேன்; தமிழில்தானே சொல்லுகிறேன். ஒரு தரம் சொன்னாலும் அதே சங்கதிதான். ஆயிரம் தரம் பன்னிப்பன்னிப் பேசினாலும் அதே சங்கதிதான். நான் சொல்லக்கூடிய தகவலை நான்தான் ஒரேயடியாகச் சொல்லிவிட்டேனே; மறுபடியும் திருப்பித் திருப்பி அதையே நீ கேட்கிறாயே! நான் உன்னோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே ஒருவேளை அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தாலும் வருவார். அப்புறம் அவர் என்மேல் ஏதாவது சந்தேகம் கொண்டாலும் கொள்வார். நீ தயவுசெய்து வெளியில் போ அப்பா இந்தப் போலீஸ் உத்தி யோகம் கத்திமுனையோடு விளையாடுவது போன்றது. நீ போ அப்பா! உனக்குப் புண்ணியமுண்டு’ என்று நயமாகவும்