பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 செளந்தர கோகிலம் கண்டிப்பாகவும் கூறினான். அதைக் கேட்ட வண்டிக்காரன் ஒருவாறு கிலேசமடைந்தான். அந்த ஜெவான் தன்னிடம் அவ்வளவு தரம் தாராளமாகப் பேசியதைக் குறித்து மிகுந்த நன்றி விசுவாசம் அந்த வேலைக்காரனது மனத்தில் உதித்தது. அவன் அதைத் தனது முக இளக்கத்தால் வெளிப்படுத்தியவண்ணம் நிரம்பவும் பணிவாகவும் பட்சமாகவும் பேசத்தொடங்கி, "ஐயா! நீங்கள் இவ்வளவு தூரம் சங்கதி தெரிவித்ததே பெரிய காரியம். இனி நான் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கவில்லை. நமஸ்காரம் ஐயா! நான் உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்” என்று கூறி நிரம்பவும் பணிவாகவும் நன்றியறிதலோடும் அவனுக்கு ஒரு கும்பிடு போட்டவுடன் அவ்விடத்தைவிட்டு நடந்து ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தான். அவன் எவ்விதமான செய்தி கொண்டுவருவானோ வென்று கட்டிலடங்கா ஆவலும் மனக்குழப்பமும் அடைந்து தத்தளித்த வண்ணம் பெட்டி வண்டியினது மறைவில் நின்றுகொண்டிருந்த பூஞ்சோலையம்மாள் ஸ்டேஷனிற்குள்ளிருந்து வந்த வேலைக் காரனது முகம் வாட்டத்தையும் ஏமாற்றத்தையும் தோற்று வித்ததை உணர்ந்து கொண்டாள். உடனே அந்த அம்மாளது மனவேதனையும் தவிப்பும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. மிகுந்த ஆவலும் பதை பதைப்பும் கொண்டு அந்த அம்மாள் எதிர்கொண்டு சிறிதுதுரம் சென்று, "என்ன அப்பா குழந்தை எங்கே போயிருக்கிறதாம்’ என்று வினவினாள். உடனே வேலைக் காரன் தனக்கும் போலீஸ் ஜெவானுக்கும் நடந்த சம்பாஷணை முழுவதையும் ஆதியோடந்தமாய் அப்படியே கூறவே, அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த கலவரமும் நடுக்கமும் அடைந்தாள். எக்காரணம் பற்றியும் கோகிலாம்பாள் காலையிலிருந்து அவ்வளவு நேரம் வரையில் வீட்டிற்குத் திரும்பி வராமலிருக்க ஏதுவில்லையென்ற எண்ணம் அந்த அம்மாளினது மனத்தில் தெளிவாகப்பட்டது. ஆனாலும், எதற்கும் தாம் உடனே சப்ஜெயிலுக்குப்போய்க் கண்ணபிரானைக் கண்டு அவனுடன் பேசி உண்மையான வரலாற்றை அறிந்து, அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டுமென்ற முடிவைச் செய்து கொண்டவளாய் உடனே ஏறி வண்டிக்குள் உட்கார்ந்துகொண்டு