பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. செளங்கா கோகிலம் கொண்டுபோய்விட்டானோ, அல்லது, அவர்கள் இருவருக்குமே வழியில் வேறு ஏதேனும் எதிர்பாராத அபாயம் நேர்ந்திருக்குமோ என்ற பலவித எண்ணங்களும் சந்தேகங்களும் தோன்றி அவளது மனத்தைக் கட்டிலடங்காத சஞ்சலத்திற்கும், கவலைக்கும், ஆவலுக்கும் உள்ளாக்கின. கோகிலாம்பாளை அழைத்துச்சென்ற மனிதன் முருகேசனிடம் தப்பான விலாசத்தைச் சொன்னதில் இருந்து, அவனால் ஏதேனும் கெடுதல் நேர்ந்திருக்குமோவென்ற நினைவே பலப்பட்டுத் தோன்றியது. அங்ங்னமாயின், உவகாநுபவமற்ற சிறுபெண்ணான கோகிலாம்பாளை அவன் எவ்விதமான மோசவலையில் வீழ்த்தி இருப்பானோ, அவ்விடத்தில் அகப்பட்டுக்கொண்டு அந்த மடந்தை எவ்வாறு தத்தளிக்கிறாளோ என்று எண்ண எண்ண பூஞ்சோலை யம்மாளது உயிரில் பெரும்பாகமும் போய்விட்டதென்றே கூற வேண்டும். அந்த அம்மாளது தேகம் கிடுகிடென்று ஆடியது. கைகால்களெல்லாம் வெடவெடவென்று உதறுகின்றன. மனமோ கண்ணைப் பறிக்கத்தக்க விசையோடு சுற்றும் பம்பரம் போலச் சுழன்று எங்கெங்கோ போய் அலைந்து தத்தளிக்கிறது. அதற்குமேல் தாம் என்ன செய்கிறது, கோகிலாம்பாளை எங்கே போய்த் தேடுகிறது என்ற நினைவும் அபாரமான விசையோடு அந்த மனது அடியோடு குழம்பி எவ்வித யோசனைசெய்யவும் சக்தியற்றதாய்ப் போகும்படி செய்துவிட்டன. அப்போது கோகிலாம்பாளைப் பற்றிய நினைவே மனத்தை முற்றிலும் கவர்ந்து கொண்டமையால் கண்ணபிரானை விடுவிக்க வேண்டுமென்ற எண்ணம் அவ்வளவாகத் தலைகாட்டவில்லை. ஆகவே, அந்த அம்மாள் பிரமித்துத் திகைத்து ஸ்தம்பித்து அப்படியே கற்சிலைப்போல உட்கார்ந்து போய்விட்டாள். அதை உணர்ந்த வேலைக்காரன், "அம்மா! நாம் இனி கொஞ்ச மும் காலதாமசம் பண்ணாமல், உடனே மாஜிஸ்டிரேட்டின் கச்சேரிக்குப் போவோம். இப்போது சுமார் 4-மணி ஆயிருக்கும் போலிருக்கிறது. 5-மணிக்குக் கச்சேரி கலைந்து மூடப்பட்டுப் போகும். ஆகையால், நாம் அவசரமாக அங்கே போவோம். அவ்விடத்தில் வக்கீல்கள் யாராவது இருப்பார்கள். நாம் யாரையாவது ஒருவரை உடனே அமர்த்தி இப்போதே