பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 செளந்தர கோகிலம் வேலைக்காரன் ஒடோடியும் சென்று அந்த அம்மாளை வக்கீலின் அறைக்கு அழைத்து வந்தான். வக்கீல் அந்த அம்மாளுடன் சம்பாஷித்து சகலமான தகவல்களையும் விரைவில் தெரிந்து கொண்டு தமது பிரயாச தட்சினை இன்னதென்று கூறி, அதையும் உடனே பெற்றுக்கொண்டு பத்துநிமிஷ நேரத்தில் ஒரு மனுவெழுதி எடுத்துக்கொண்டு பூஞ்சோலையம்மாளுடன் மேன்மாடத்திற்குச் சென்று பிரதான மாஜிஸ்டிரேட்டின் முன்னர் ஆஜராகி அந்த மனுவைக்கொடுத்து கண்ணபிரான் முதலியார் தக்க கண்ணியம் வாய்ந்த சர்க்கார் உத்தியோகஸ்தர் என்றும், அவருக்கும் ஒரு பெருத்த தணிகருடைய வீட்டில் பெண் கொடுக்கப் போகிறார்கள் என்பதைக் கண்டு யாரோ விரோதிகள் கட்டுப்பாடாக அவர்பேரில் அந்தக் குற்றத்தை சிருஷ்டித்திருக்கிறார்கள் என்றும், அவர் இல்லாத காலத்தில் அவருடைய வீட்டில் திருட்டுச் சொத்து புதைக்கப்பட்டிருந்தது என்ற விஷயத்தைத் தவிர, அவரை நேரில் அந்தக் குற்றத்தோடு சம்பந்தப்படுத்தக்கூடிய ருஜ எதுவுமில்லை என்றும், ஆகையால் அவரை உடனே ஜாமீனில் விடவேண்டும் என்றும், அதற்காக தாம் ரொக்கமாக எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானாலும் ஜாமீன் கட்ட சம்மதிப்பதாகவும் கூறி நிரம்பவும் திறமையாகத் தமது கட்சியின் நியாயங்களை எடுத்துப் பேசினார். அதைக் கேட்ட நியாயாதிபதி சிறிது நேரம் ஆழ்ந்து யோசனை செய்து, "இதை நான் சம்பிராதயப்படி போலீசாருக்கு அனுப்பி, இதைக்குறித்து அவர்கள் ஆட்சேபணை சொல்லுகிறார்களா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு மேல் உத்தரவு பிறப்பிக்கிறேன். கச்சேரி கலைவதற்கு இன்னம் 15-நிமிஷ நேரந்தான் இருக்கிறது. அதற்குள் இது போலீஸாருக் குப் போய்த் திரும்பி என்னிடம் வர அவகாசம் இராது. ஆகையால், நீங்கள் நாளையதினம் காலை சரியாகப் பதினொரு மணிக்கு வந்து சேருங்கள். அதற்குள் இதை என்னிடம் அனுப்பிவிடும்படி நான் போலீசாருக்கு எழுதியனுப்பி விடுகிறேன்” என்றார். அதைக்கேட்ட வக்கில், "சம்பிரதாயத்துக்கு விரோதமான காரியத்தைச் செய்யும்படி நான் கேட்டுக்கொள்வது தகாத