பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 89 அவசரம் ஒன்றும் இல்லை, இந்த அம்மாளுடைய மூத்த பெண்ணை நீர் நன்றாகப் பார்த்திருக்கிறீர் அல்லவா? அந்தப் பெண்ணை, நீர் இன்று காலையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போதாவது, அங்கிருந்து இங்கே வந்த பிறகாவது இதுவரையில் பார்த்ததுண்டா?” என்றார். அந்த விபரீதமான கேள்வியை உணர்ந்த கண்ணபிரான் திடுக்கிட்டு மிகுந்த குழப்பமும் சஞ்சலமும், மனவேதனையும் ஆவலும் கொண்டவனாய், "நான் பார்க்கவில்லையே! அந்தப் பெண் பங்களாவிலிருந்து புறப்பட்டு இங்கே வந்ததா என்ன?” என்று கட்டிலடங்கா வியப்பும் துடிதுடிப்பும் தோன்றக் கூறினான். வக்கீல், 'அந்தப் பெண்ணுக்கு நீர் இன்று காலையில் ஒரு கடிதம் எழுதி அனுப்பியதுண்டா? என்றார். கண்ணபிரான் : (மட்டிலடங்கா வியப்பும் பதைப்பும் ஆவலும் அடைந்து) ஆம். நான் கடிதம் அனுப்பியது நிஜந்தான். அதை நேற்று இரவில் அல்லவா அனுப்பினேன்; இன்று காலையில் அல்லவே. வக்கீல் : நேற்று இரவிலா அனுப்பினர் சரி, இருக்கட்டும்; யாரோ ஒர் அதிகாரியின் உதவி உமக்குக் கிடைத்திருப்பதாகவும் அவருடைய அநுமதியின்மேல் கடிதம் எழுதியதாகவும் சொல்லி யிருக்கிறீரே. அந்த அதிகாரி யார் என்பது உமக்குத் தெரியுமா? அவர் எழுதச்சொல்லி நீர் அந்தக் கடிதத்தை எழுதினரா, அல்லது, நீரே கதாவாக அதை எழுதினரா? அதை அவர் யாரிடம் கொடுத்தனுப்பினார்? வயசான பெரியவர்களான உம்முடைய தாயாரும், மாமியாரும் இருக்கையில் யெளவனப் பிராயத்துப் பெண்ணை நீர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி என்ன காரணத்தினால் எழுதினர்? இந்த விவரங்களையெல்லாம் நன்றாகச் சொல்லும்” என்றார். - வக்கீல் அந்தக் கேள்விகளைக் கேட்ட மாதிரியிலிருந்து, ஏதோ விபரீத சம்பவம் நேர்ந்திருக்க வேண்டுமென்று சுலபத்தில் யூகித்துக்கொண்ட கண்ணபிரான் கட்டிலடங்கா மனவேதனை யும் திகிலும் குழப்பமும் அடைந்து தத்தளித்தவனாய்ப் பேசத்