பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 5 விட்டனர். நிரம்பவும் அழகாகவும் உன்னதமாகவும் அலங்க ரிக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான பங்களா உயிரற்ற வெற்றுடம்பு போலவும், பாழடைந்த மண்டபம் போலவும் பயங்கரமாகத் தோன்றியது. வேலைக்காரர்களும், வேலைக்காரி களும் அன்றைய தினம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களையும் கண்டு, அவைகளை உண்மையென்றே நம்பினார்கள். ஆகை யால், தங்களது எஜமானியம்மாளுக்கும் பெண்ணிற்கும் நேர்ந்த பிரமாதமான அவமானத்தையும் தலைகுனிவையும் நினைத்து நினைத்து மட்டுக்கடங்காத் துயரமும், அவமானமும், சோர்வும் அடைந்து தளர்ந்து மூலைக்கு மூலை முட்டு முட்டாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். அன்றைய பகல் முழுதும் பூஞ் சோலையம்மாள் கோகிலாம்பாள் ஆகிய இருவருக்கும் ஆகாரம் முதலிய எந்த தேகபாதையிலும் மனம் நாடவில்லை, புஷ்பாவதி முதலியோரையும் உண்ணும்படி சொல்லி உபசரிக்க வேண்டும் என்பதும் தோன்றவில்லை. . அப்படிப்பட்ட விவரிக்க சாத்தியமில்லாத மகா துக்க கரமான நிலைமையில் இருந்தபடியே, அவர்கள் கற்பகவல்லி யம்மாளைத் தெளிவித்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அத்தகைய அபாரமான இழிவிலிருந்து நாம் எப்படி விலகுவது என்ற ஒரே கவலை மாத்திரம் அவர்களது மனதைத் துளைத்துச் சித்திரவதை செய்து கொண்டிருந்ததேயன்றி, கற்பகவல்லியம்மாள் அப்படிப் பட்ட கேவலமான நடத்தை உடையவள் அல்ல என்பதை மாத் திரம் அவர்களது மனம் உறுதியாக நம்பியது. அன்றையதினம், பிள்ளையின் பேரிலும், தாயின் பேரிலும் ஏற்பட்ட இரண்டு அவதூறுகளும், காலகதியினால், போலீசாரால் கற்பிக்கப்பட்ட பொய்க் குற்றங்களாக இருக்கலாம் என்றும், தாயும் பிள்ளையும் மாசுமறுவற்ற நல்ல நடத்தை உடையவர்கள் என்றும், அவர்கள் புஷ்பாவதியிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தபடியே, கற்பக வல்லியம்மாளது விஷயத்தில் கரைகடந்த இரக்கமும், பச்சாதா பமும், வாஞ்சையும் காண்பித்து அந்த அம்மாளைத் தேற்றி, ஏதாவது ஆகாரம் சாப்பிடும்படி வருந்தி உபசரித்துக் கொண்டிருந்தனர். كان கற்பகவல்லியம்மாள் தனது கண்களைத் திறந்து அவர்களது முகத்தில் விழிக்கவும், வாயைத் திறந்து அவர்களோடு பேசவும்