பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 71 பெயரைப் பதிந்து வைத்துவிட்டு அந்த விலாசத்துக்கு வரும்படியும் முருகேசனிடம் சொல்லிவிட்டு வண்டியை ஒட்டிக்கொண்டு போய்விட்டானாம். முருகேசன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கொஞ்ச நாழிகையில் அங்கிருந்து வெளியில் வந்து தங்கசாலைத் தெருவுக்குப் போய்த் தேடித் தேடிப் பார்த்தானாம். 2075-என்ற இலக்கமுள்ள வீடே அந்தத் தெருவில் இல்லையாம். அவன் உடனே பங்களாவுக்கு வந்து அந்தத் தகவலைத் தெரிவித்தான். கோகிலாம்பாள் ஸ்டேஷனுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்துவிடுவாள் என்று நினைத்து நாங்கள் வெகுநேரம் வரையில் காத்துக் காத்துப் பார்த்தோம். பெண் திரும்பிவரவே இல்லை. அவள் எங்கே போயிருக்கிறாள் என்ற இடமே தெரிய வில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்ததில், அங்கே யாரும் வரவில்லையென்று சொல்லிவிட்டார். இங்கே வாசலில் இருக்கும் பாராக்காரர்களும் அவள் இங்கே வரவில்லையென்று சொல்லிவிட்டார்கள். அவளை எந்த மோசக்காரர்கள் எந்த விதமான கொடுமைக்கு ஆளாக்கிவிட்டார்களோ தெரிய வில்லையே!” என்று கூறிப் பதறித் தவித்துத் தனது கைகளைப் பிசைந்து கொண்டு கண்ணிர் விடுத்துக் கலங்கியழத் தொடங்கினாள். அந்த வரலாற்றைக் கேட்ட கண்ணபிரான் தாங்க வொண்ணாத அபரிமிதமான பிரமிப்பும், திகைப்பும், கலவரமும், பதைபதைப்பும் அடைந்து, "ஆகா! என்ன ஆச்சரியம்! ஏதோ பெருத்த மோசடி நடந்துவிட்டது போலிருக்கிறதே! அந்த ஜெவான் சொன்ன வரலாறு முழுதும் பொய்யாக இருந்தால், அவனும், அந்த இன்ஸ்பெக்டரும் ஏதோ கெட்ட எண்ணத்தை வைத்துக்கொண்டு என்னிடம் அம்மாதிரி தந்திரமாகப் பேசிக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு போனதாகவல்லவா நினைக்க வேண்டி இருக்கிறது. கடிதம் கொண்டுவந்த மனிதன் போலீஸ் உடைகளைப் போட்டுக்கொண்டே வந்திருந்தானா? அவன் பார்வைக்கு எப்படி இருந்தான்?' என்றான். பூஞ்சோலை யம்மாள், 'அவன் உயரமாகவும் கருப்பாகவும் இருந்தான். முகத்தில் அம்மைத் தழும்புகள் இருந்தன. அவனுடைய காதில் சிவப்புக்கல் கடுக்கன் இருந்தது” என்றாள். r