பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செளந்தர கோகிலம் நான் பொழுதை வீணாக்குவதில் உங்களுக்கு ஏதாவது நன்மை உண்டாகக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த ஊரின் சுற்றளவு 27-மைல். இதில் லக்ஷம் சந்துக்களும் தெருக்களும் இருக்கின்றன. இதில் சாதாரணமாக வெளியில் வந்து போய்த் கொண்டிருக்கும் மனிதர்களையே நாம் கண்டுபிடிப்பது துர்லபம். அதுவுமன்றி இப்போது அஸ்தமன வேளையாகி விட்டது. மோசக் கருத்தோடு பெண்ணைக் கொண்டுபோயிருப் பார்கள். அவளைப் பத்திரமான மறைவிடத்தில் ஒளித்து வைத்திருப்பார்கள். நான் கச்சேரியில் நேருக்குநேர் வந்திருக்கும் மனிதர்களோடு வாக்குவாதம் செய்து பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரனேயன்றி, ஒளியவைக்கப்பட்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு சமர்த்தனல்ல. இந்தக் கண்ணபிரான் முதலியார் சொல்வதைப் பார்த்தால், போலீஸ் இன்ஸ்பெக்டரே ஏதோ மோசக்கருத்தோடு பெண்ணை வருவிக்க வேண்டுமென்று நினைத்து இவரை ஏமாற்றி இவரிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு போனதாகத் தெரிகிறது. ஆனைகவுணி போலீஸ் ஸ்டேஷனண்டை ஜெவான் உங்களுடைய வண்டிக்காரனைப் பிடித்துக்கொண்டு போனதும் கடிதம் கொண்டுவந்து கொடுத்தவன் வண்டிக்காரனிடம் தப்பான விலாசத்தைச் சொன்னதும் முன்யோசனையின்மேல் செய்யப் பட்ட காரியங்களாகவே தோன்றுகின்றன. மற்ற திருடர்களை யும் மோசக்காரர்களையும் கண்டுபிடிக்கிறவர்களான போலீசாரே இவ்விதமான படுமோசத்தில் இறங்கி இருக்கையில், அதை நாம் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை. அதுவுமன்றி, அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதாரணமான மனிதனன்று. அவன் எப்பேர்ப்பட்ட கொடிய அட்டுழியத்தையும் நிரம்பவும் துணிவாகச் செய்துவிட்டு, தனக்கு ஒன்றுமே தெரியாதென்று கடைசிவரையில் சாதித்துவிடக்கூடிய மகாபாதகன். அவன் எதையும் கூசாமல் செய்வான். அவனிடம் நாம் இப்போது போய், இந்தச் சங்கதியைப் பற்றிக் கேட்டால், அவன் தனக்கு ஒன்றுமே தெரியாதென்று சொல்லி அடியோடு மறுப்பதோடு, நம்மை வைத்து அதட்டி அனுப்புவான். கண்ண பிரான் முதலியாரைத் தான் பார்க்கவே இல்லையென்றும், அவர்